புதன், 5 செப்டம்பர், 2018

Daily Dose 5-9-18


எப்போதும் நம் கூடவே இருக்கும் நம் தேவனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

உலக வழக்கத்தின்படி பள்ளி பாடத் திட்டத்திலேயே நாம் படிப்பது:

சூரியனுக்கு எதிர்மறை (x) சந்திரன்
கேள்வி x பதில்
பகல் x இரவு
ஆண் x பெண்
என்று பல உதாரணங்களை பார்க்கிறோம்.

ஆம்.. உலக வளக்கத்தின் படி ஆணுக்கு பெண் நேர் எதிர்மறை.

ஆணுக்கு – உடல் வலிமை, பெண் – மன வலிமை
ஆண் – ஞாபக குறைவு, பெண் – ஞாபக புலி !
ஆண்கள் சுலபமாக தவறுகளை மறப்பார்கள்.
பெண்களுக்கு அது மிக கடினம்.
ஆண்கள் எப்போதும் மேலோட்டமாய் கவனிக்கிறவர்கள்.
பெண்களோ மிகவும் உன்னிப்பாய் எல்லாவற்றையும் ஆராய்பவர்கள்.

இப்படி இன்னும் அடுக்கி கொண்டே போகலாம். ஆனால், தேவன் பெண்ணை உண்டு பண்ணியது ஆணுக்கு எதிர்மறையாய் இருக்கவா?

நிச்சயமாக கிடையாது.

*ஏற்ற துணையாக* தான் உண்டு பண்ணினார்! (ஆதி 2:18)
கணவனுக்கு *ஏற்ற துணையாய் இருக்கும்படி மனைவியை* உண்டு பண்ணினார். 1 கொ 11:9 & 1 பேது 3:7

இல்லாதவைகளை இருப்பது போல ஜோடித்து, ஒருவரை ஒருவர் சந்தேகித்து, முரண்டு பிடித்து இல்லாமல் - ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து, ஏற்ற தாழ்வுகளை சரி செய்து, ஒருவருக்கு ஏற்ற ஒருவளாய் ஒரே சரீரமாய் வாழ வேண்டும் என்பது தான் தேவனுடைய கட்டளை.

வெறுக்க பல காரணங்கள் இருக்கலாம்..ஆனால் கட்டின புருஷனையோ / மனைவியையோ நேசிக்க ஒரே ஒரு காரணம் கிடைக்கதோ?

அடிப்படை அன்பு கொஞ்சம் இருந்தாலே – எந்த பிரிவும் கணவன் மனைவியினிடையே இருக்காது.  அன்பு இல்லையேல் – சகலமும் தீமையாய் தான் தெரியும்.

குடும்பத்தில் சமாதானமும், சந்தோஷமும் ஏற்ற தாழ்வுகளை களைந்தால் மாத்திரமே உண்டாகும். நீ பெரியவன், நான் பெரியவள் என்றால்... பிசாசு அந்த வீட்டில் கொண்டாட்டம் போடுவான்.

எடி ஜோயல்
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
https://joelsilsbee.blogspot.com

May the Lord be with us who always wishes so.

We read in our school books also like:
Opposites for
Sun x Moon
Question x Answer
Day x Night
Man x Women etc.

Yes.. As per world statistics, man is opposite to women and viceversa.

Men – stronger in physique, Women – stronger in mind.
Men – less memory power, women – super computer
Men – easily forgets the mistakes, women – very hard to wipe off, maybe they never forget.
Men – looks anything aloof. Women – looks everything with more concern.

We can say many more like this. But, did God create women to be an opposite gender? NEVER.

He created them *to be suitable* (Gen 2:18)
Wife was created to be *perfect match for Husband* (1 Cor 11:9) & 1Pet 3:7

Avoid pairing incidents on vain imaginations, do not doubt each other, refrain from fractious attitude. By giving away of anything between each other, level-up the ups and downs between each other so they should live as single body, that is God’s commandment.

You may have several reasons to hate..but was there not a single reason to love your husband / wife?

Even a basic love between them – will keep the divisions apart between Husband & Wife. Where there is NO LOVE - EVERYTHING will looks wrong.

 Happiness and Peace will be in home only by levelling up ups and downs. If a husband or wife keeps holding their head above each other, then satan will be celebrating in their home.

Eddy Joel
+91 8144 77 6229 / joelsilsbee@gmail.com
https://joelsilsbee.blogspot.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக