|
நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின்
நாமத்தில் வாழ்த்துக்கள்.
சுமார் 15 வருடம்
முன்பு நடந்த ஒரு சம்பவம்.
ஒரு சபையில் செய்தி
கொடுக்க அழைக்கப்பட்டு பின்னர், அந்த ஊழியக்காரரோடு உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்த
போது ஒரு நபர் வந்து எல்லாரும் கூடியாயிற்று ஜெபம் செய்ய கல்லறைக்கு போகலாம் என்று
கூப்பிட்டார். இவர் உடனே நாங்களெல்லாம் ஊழியக்காரங்க – அங்கெல்லாம் வரமாட்டோம்னு
சொல்லி அனுப்பி விட்டார்.
எனக்கு வெட்கமாய் போனது.
அவரிடம் வேதாகமத்தின் படி விளக்கம் கொடுத்துவிட்டு, நானும் அங்கிருந்து புறப்பட்டுவிட்டேன்.
எங்கிருந்து இப்படி
ஒரு கூற்று வந்தது? நசரேய விரதம் உள்ளவர்கள் - சொந்த தாயோ தகப்பனோ இறந்தால் கூட பக்கத்தில்
போக கூடாது. திராட்சை ரசமோ பழமோ கொட்டையோ எதுவுமே வாயினுள் போக கூடாது, தலை/தாடி
முடி வெட்டிக்கொள்ள கூடாது (எண் 6:1-12) இதை முன்னிட்டு இந்த அரை வேக்காடு கோமாளிகளும்
ஊரை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
இயேசு கிறிஸ்துவோ இந்த
உலகத்தில் வாழ்ந்த போது பிணத்தின் அருகே சென்று அவர்களை உயிரோடே எழுப்பினார். திராட்சை
ரசம் பருகினார். ஆனால் நசரேய விரதம் இருக்கவில்லை. அவர் நாசரேத்து ஊரிலிருந்து வந்ததாலேயே
அவர் நசரேயன் என்று அழைக்கப்பட்டார் (மத் 2:23)
கிறிஸ்தவர்கள் என்று
சொல்லிக்கொண்டு கிறிஸ்துவை பின்பற்றாமல் இருந்தால் – அது வேஷம் !
எடி ஜோயல்
+91 8144 77 6229
|
Greetings to you in the name of Jesus
the Nazarene.
About some 15 years ago, I was
discussing with the local congregation preacher who invited me for sharing
Lord’s message. After the service, a gentleman rushingly came and asked the
preacher to come and pray at a grave yard as everyone gathered there for
burial. He denied going with him by
saying that preachers wont come near to dead bodies.
I felt shame. Explained the preacher
scripturally and left from there.
From where such doctrines are brought?
Anyone who is taken a vow of Nazarite,
he shall not go near to the dead body of even his/her own mother or dad
passed away. He can neither drink a grape juice nor grape fruit nor its seed
even. He can neither shave nor trim his hair (Num 6:1-12). Based on this
scripture, these half-baked buffoons are duplicitous the people.
When Jesus Christ in this world, He went
near to the corpse gave spirit to it, drank grape juice. He was not under
Nazarite vow. He was called Nazarene because of His nature place from
Nazareth (Mat 2:23).
Calling themselves as Christian and not
following Christ is guise.
Eddy Joel
+91 8144 77 6229
|
புதன், 1 ஆகஸ்ட், 2018
Daily Dose 1-8-18
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக