திங்கள், 11 ஜூன், 2018

Daily Dose 12-6-18


வல்லவரான நம் ஆண்டவர் நம்மை சகல நன்மையினாலும் நிரப்புவாராக.

கொஞ்சம் வளர்ந்ததும் நம் நடை உடை பாவனைகள் மாற்றிக்கொள்வோம். இல்லையென்றால் சமுதாயம் நமக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்காது.

ஒரு *சின்ன கார் ஆகிலும் வீடு முன்னாடி நின்றால் தான் கவுரவம்* என்று லோன் போட்டாவது  வாங்கி நிறுத்திவிட முயற்சி எடுக்கும் ஜனங்களை நாம் பார்க்காமல் இல்லை.

ஒட்டகத்தின் தோலை உரித்து உடுப்பாக உடுத்திக்கொண்டு வெட்டுக்கிளியும் காட்டு தேனும் சாப்பிட்டு தன்னுடைய வாழ்க்கையை மிக எளிமையாக வாழ்ந்த *யோவானுடைய குரல் அந்த நாட்டு ராஜாவின் அரண்மனையில் ஒலித்துக்கொண்டிருந்தது*. இந்த மனுஷனுக்கு அந்த ராஜாவே கீழ்படியும் அளவிற்கு சூழ்நிலை இருந்தது.

வெளிதோற்றத்தை அலங்கரிக்கும் முயற்சியை விட எண்ணங்களும் செயல்பாடுகளும், தூய்மையாயும், அது ராஜாவாக இருந்தாலும் தேவ வாக்கு படி நடப்பதையே கொள்கையாக பிடித்துக்கொள்வோம். *நம்மை உயர்த்துவது தேவனே. மனுஷன் அல்ல*.

*ஆதார வசனங்கள்* :
மாற்கு 1:6  யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டவனாயும், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவனாயும் இருந்தான்.

மத் 14:3-5  ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.  ஏனெனில்: நீர் அவளை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான். ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான்.

Eddy Joel
+91 8144 77 6229


May God Almighty fill us with all goodness.

We strive to change our style of fashion so the society respects.
Atleast by taking a loan, we see people strive to park a car in front of their house in order to yield respect from others.

The man dressed in the skin of Camel, eating grasshopper and wild honey, lived his life very simple but his voice heard and shaken the Herod’s palace. John the Baptist was a challenge to all.

Thoughts and activities are to be cleaner than the endeavor of decorating outer space.
Let the principle of walking according to God's promise be our culture and not to deviate even if it is for a highest graded man.

God raises us. Not man.

Scripture References:
Mar 1: 6 And John was clothed with camel's hair, and was girded with a robe over his body, and was eating and grinding.

Mat 14: 3-5 For Herod had laid hold on John, and bound him in prison for Herodias' sake, his brother Philip's wife. For John said unto him, It is not lawful for thee to have her. But Herod had a fear of killing him, because they feared him, because they considered him to be a prophet.

Eddy Joel
+91 8144 77 6229
joelsilsbee@gmail.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக