புதன், 11 ஏப்ரல், 2018

இரவில் தான் கர்த்தருடைய பந்தி எடுக்கவேண்டுமா? கால் கழுவுவது அவசியமா?

*இரவில் தான் கர்த்தருடைய பந்தி எடுக்கவேண்டுமா? கால் கழுவுவது அவசியமா?*

Question #1 :

1. கீழ்க்கண்ட காரியங்கள் வேதத்தில் இருப்பதால், கர்த்தருடைய பந்தி இரவில் தான் நடத்தவேண்டும் என்ற உபதேச கோட்பாடு பின்பற்றுவது சரியா?

Ø  பஸ்கா ஆடு இரவில் அடிக்கப்பட்டது
Ø  நம்முடைய பஸ்காவாகிய இயேசு கிறிஸ்து அடிக்கப்பட்டபோது 3 மணி நேரம் பகலை இரவாக தேவன் மாற்றினார்
Ø  இயேசு கிறிஸ்து இரவில் கர்த்தருடைய பந்தியை நிறுவினார்
Ø  அப்போஸ்தலர்கள் இரவில் செய்தார்கள்
Ø  இராப்போஜனம் என்றும் சொல்லப்பட்டுள்ளது
 
*Reply:*

கீழ்கண்ட பெயர்களால் கர்த்தருடைய பந்தி வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது: 
கர்த்தருடைய மேஜை
ஐக்கிய பந்தி
ஆசீர்வாதத்தின் பாத்திரம்
அப்பம் பிட்குதல் என்று.

அப் 20:7ன் படி, வாரத்தின் முதல் நாள் என்பது சொல்லபட்டிருக்கிறது.
அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான் என்று பார்க்கிறோம்.

எப்போது பந்தி கொடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. பகலிலும் இருந்திருக்கலாம்.

வாரத்தின் முதல் நாளில் இவை செய்யப்பட்டது என்று அப்போஸ்தலர்கள் மூலமாக நாம் கற்கிறோம்.
 
வாரத்தின் முதல் நாளில் காணிக்கை எடுத்ததை கற்கிறோம்.
வாரத்தின் முதல் நாளில் அப்பம் பிட்டத்தை கற்கிறோம்.
வாரத்தின் முதல் நாளில் சபை கூடினதை கற்கிறோம்.
வாரத்தின் முதல் நாளில் ஆராதித்ததை கற்கிறோம்.

அவர்கள் இரவில் மாத்திரமே கைக்கொண்டதாக ஆதாரம் இல்லை.

நடந்தவை எல்லாம் இரவில் என்ற கோணத்தில் நாம் பார்த்தால்...
இந்த பாத்திரம் என்று சொன்ன அர்த்தத்தில் -
அந்த பாத்திரத்திற்கு எங்கு போவது?
மாடியில் அப்போஸ்தலர் கூடினதால் - நாம் மாடியில் கூடவேண்டுமோ?

என்னை நினைவு கூறும்படி இதை செய்யுங்கள் என்றார்.
அதை அப்போஸ்தலர்கள் - வாரத்தின் முதல் நாளில் செய்தார்கள்.
அதை நாம் பின்பற்றுகிறோம்.

தான் சொன்னதை நாம் கடைபிடிக்கும் படி போதிக்க அப்போஸ்தலர்களுக்கு கட்டளையிட்டார் (மத் 28:18-19)
 
ஆகவே, நாம் அப்போஸ்தலர் உபதேசத்தில் நிற்கிறோம்.
 
கிறிஸ்துவின் சிலுவை மரணம் வரை - பழைய ஏற்பாடு, அதாவது - மோசேயின் பிரமாணம் அமுலில் இருந்தது.
 
நாம் - கிறிஸ்துவின் பிரமாணத்தில் இருக்கிறோம். ஆகவே, காலாவதியான பஸ்கா முறை நாம் கடை பிடிப்பது இல்லை.

*Question #2*
பாதம் கழுவுதல் நிகழ்வோடு சேர்த்துதான் கர்த்தருடைய பந்தி நடத்தவேண்டும் என்ற உபதேசமும் சில சபைகளில் இருக்கிறதே. யோவா.13 ம் அதிகாரத்தின் கீழேயுள்ள சில வசனங்கள் ஆதாரமாக சொல்லப்படுகிறது.
 
*Reply*
கிறிஸ்து மரிக்க போகிறார் என்று தெரிந்ததும், அடுத்து யார் பரலோகத்தில் பெரியவனாக இருக்கவேண்டும் என்ற விவாதம் சீஷருக்குள்ளே இருந்தது.தன் அம்மாவையும் சிபாரிசுக்கு கூட்டி வந்து விசாரிக்கின்றனர். (மத் 20:18-28)
 
அந்த சம்பாஷனைக்கு பிறகு நடந்த சம்பவம் - பஸ்கா / கடைசி பந்தி.
 
அப்போது, தன்னுடைய செயலால் - சீஷருக்கு, யார் பெரியவன் / சிறியவன் என்பதை கிறிஸ்து விளக்குகிறார்.
 
பரலோகத்தில் பெரியவனாய் இருக்க - அவனவன் தன்னை தாழ்த்த வேண்டும் என்பதை காண்பிக்கிற விளக்கம் இது.
 
அப்போஸ்தலர்கள் இந்த சம்பவத்தை பின்னர் செய்ததாக எந்த பதிவும் இல்லை.
ஆகவே, இதை நாம் செய்வது இல்லை.
 
கிறிஸ்து - யூத முறைப்படி, அவர்களுக்கு காண்பித்த செயல்.
 
நாமும் இதை செய்ய வேண்டும் என்று கிறிஸ்து விரும்பியிருந்தால் / கட்டளை கொடுத்து இருந்தால், அப்போஸ்தலர்கள் நமக்கு அதை வலியுறித்தியிருப்பார்கள்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக