திங்கள், 3 நவம்பர், 2025

#1225 - கடவுளுக்கும் மனுஷிக்கும் பிறந்த பிள்ளையா இயேசுகிறிஸ்து? இது தவறான கேள்வினா என்னை மன்னிச்சுடுங்க. பிறப்புக்குமுன்.... பிறப்பிக்கு பின் இயேசு கிறிஸ்துவை குறித்துக் கொஞ்சம் சொல்லுஙக

 #1225 - *கடவுளுக்கும் மனுஷிக்கும் பிறந்த பிள்ளையா இயேசுகிறிஸ்து? இது தவறான கேள்வினா என்னை மன்னிச்சுடுங்க.  பிறப்புக்குமுன்.... பிறப்பிக்கு பின் இயேசு கிறிஸ்துவை குறித்துக் கொஞ்சம் சொல்லுஙக*
 
*பதில்* :  ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொள்வதால் விந்துக்கள் இணைந்து கரு உருவாகியே மனிதர்களாகிய நாம் அனைவரும் பிறக்கிறோம் அல்லது நவீன விஞ்ஞான முறையில், ஆணின் விந்தை தனியே எடுத்து அதை பெண்ணின் கர்ப்பப் பையில் வைத்து கரு உருவாகிற முறையிலும் குழந்தை உருவாகுகிறது. எப்படியாயினும் குழந்தை உருவாக ஒரு ஆணிண் விந்து அவசியம்.
 
இந்துக்களின் புராணங்களில் (கதைகளில்) வருவது போல கடவுள் மனுஷியுடன் உறவு கொள்வதில்லை.
 
இயேசு கிறிஸ்துவோ - 
ஆணின் துணையினாலோ அல்லது 
ஆணிண் விந்துவின் மூலமாகவோ பிறக்கவில்லை. 
 
ஏசா. 7:14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு “கன்னிகை கர்ப்பவதியாகி” ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
 
கலா. 4:5 காலம் நிறைவேறினபோது, “ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும்” (மூல பாஷையில் – ஸ்திரீயின் வழியில் பிறந்தவர்  / made of women) நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.
 
யோ. 1:13 - 14 அவர்கள், “இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல்”, தேவனாலே பிறந்தவர்கள். அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
 
ஒரு மனிதன் எவ்வாறு பிறக்கிறானோ அதே வகையில்
பெண்ணின் வயிற்றில் கர்ப்பப்பையின் வழியே குழந்தையாக தேவன் மாம்ச வடிவில் பிறந்தார். 
 
1யோ. 4:2  தேவ ஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: “மாம்சத்தில் வந்த” இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.
 
1யோ. 4:3  “மாம்சத்தில் வந்த” இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
 
2யோ. 1:7  “மாம்சத்தில் வந்த” இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
 
ரோ. 1:5  “மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும்”, பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட “தேவகுமாரனுமாயிருக்கிறார்”.
 
1தீமோ. 3:16  அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. “தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்”, ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
 
இப்படியாக இன்னும் ஏராளமான வசனங்களை எடுத்துக்காண்பிக்கலாம். இதுவே போதுமானது என்று நம்புகிறேன்.
 
பெண்ணின் வித்து (Seed / zera in Hebrew) என்று ஆதியாகமம் 3:15ல் வாக்களிக்கப்பட்டது. 
 
ஏனெனில் – 
பாவத்தில் விழுந்த ஆதாமின் மூலமாக 
வந்த எந்த மனிதனும் பாவத்தினுள் ஏற்கனவே வகுக்கப்பட்டுவிட்டதால், 
உலகத்தின் பாவத்தை தீர்க்க பாவமில்லாதவராக இயேசு வந்தார்.
 
எபி. 4:15  நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
 
*இந்நாட்களில் அநேகர் தங்களை கிறிஸ்துவின் சபையார் என்று மார்தட்டிக்கொண்டு, கிறிஸ்துவை தேவனுடைய குமாரன் என்று ஏற்காமல், அவர் தேவன் அல்ல என்று வாதிட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு விரோதிகள்*
. வீட்டினுள்ளேயே நுழையவிடக்கூடாதென யோவான் அப்போஸ்தலன் சொல்லியிருப்பதன் அவசியத்தை நாம் உணரவேண்டும். 2யோ. 1:10-11 
 
மாம்சத்தில் வந்த இயேசுவைக் *கர்த்தர் என்றும் கிறிஸ்து என்றும் ஏற்காதவனே அந்திக்கிறிஸ்து* என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 
 
1யோ. 2:22  இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
 
1யோ. 4:3  மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.
 
2யோ. 1:7  மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
 
2)
*இயேசு கிறிஸ்து - இந்த உலகத்தில் பிறப்பதற்கு முன்பும் இருக்கிறவர்*
சிலுவைக்கு பின்பும் இருக்கிறவர். வெளி. 1:8, 11, 21:6, 22:13 
 
எப்போதும் அவர் வார்த்தையானவர். யோ. 1:1, 14, 1யோ. 1:1-2, 5:7, வெளி. 19:13
 
எப்போதும் அவர் தேவன்.  யோ. 10:30-33, 20:28; சங். 45:6; ஏசா. 7:14, 9:6, 40:9-11; மத். 1:23; ரோ.  9:5; பிலி. 2:6; 1தீமோ. 3:16; தீத்து 2:13; எபி. 1:8-13; 2பேதுரு 1:1, 1யோ. 5:7, 5:20
 
மனித குலத்திற்குள் பாவ மன்னிப்பின் வழியாய் ஒரு மீட்பராய் வந்ததன் நிமித்தம் அவர் தேவகுமாரன் என்றழைக்கப்படுகிறார். ரோ. 1:5
 
இந்த உலகத்திற்குள் மாம்சத்திலே வந்து சிலுவையில் மரணத்தை வெற்றிச்சிறந்ததால் – அவருக்கு: 
ஆண்டவர் – அப். 2:36
கர்த்தர் – பிலி. 2:11
மேசியா (கிரேக்க வார்த்தை) / இரட்சகர் / மீட்பர் (தமிழ் வார்த்தை) / கிறிஸ்து (எபிரேய வார்த்தை) – அப். 2:36, 4:11-12, 5:30-31, 10:36-42; சங். 2:1-8; மத். 28:18-20; யோ. 3:35-36, யோ. 5:22-29; ரோ. 14:8-12; 2கொரி. 5:10; 2தெச. 1:7-10
பிரதான ஆசாரியன் – எபி. 9:11-15
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தர் – எபி. 9:15
மூத்த சகோதரன் - ரோ. 8:29
அப்போஸ்தலன் -  எபி. 3:1
என்ற பெயர்களும் கொடுக்கப்பட்டது. 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India) 

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2024/08/08/volume2

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

*வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக