#1062 - *ஆராதனையில் இசைக்கருவி உபயோகப்படுத்தக்கூடாதென்றால், பின்புறமாக கோரஸ் போல ரீங்காரம் அமைத்து பாடுகிறார்களே?* அதை எப்படி புரிந்துக்கொள்வது?
*பதில்* : பாடுவதென்பது தொழுகையில் ஒரு அங்கம். அதை ஏறெடுப்பவர் *ஒவ்வொருவரும்* தேவனை துதிக்கிறார்கள். பாடலின் இனிமைக்காக இன்று ரீங்காரம் இடுகிறவர்கள் நாளை வாயிலேயே தாளத்தையும் போட ஆரம்பிக்கலாம்!
இசைக்கருவிகளின் ஒலியில் *எந்த வார்த்தையும்* வெளிவருவதில்லை. அது ஒரு சப்தம் அல்லது இனிமையான சப்தம் மாத்திரமே.
*ரீங்காரத்தில் எவ்வித அர்த்தமோ, போதனையோ, புரிதலோ, உபதேசமோ, துதித்தலோ, ஸ்தோத்தரிப்பதோ வெளிப்படாது*. ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். எபே. 5:17
பாடல்கள் மேற்கூறியவைகளை வெளிப்படுத்தவேண்டும் என்பது தேவனுடைய கட்டளை. எபே. 5:19-21, யோ. 4:23-24, கொலோ. 3:16
பாடல்களுக்கு ரீங்காரம் இடுபவர்கள் இசைக்கருவிக்கு ஒத்தவர்கள். அவர்களது பங்கு கேட்பவர்களது காதுகளுக்கு இனிமையை சேர்க்கலாமேயன்றி தேவனுக்கான தொழுகையில் எதுவும் பங்கு வகிக்க முடியுமா?
அர்த்தமற்ற ரீங்காரங்கள் அவசியம் என்றால் இசைக்கருவியையே இவர்கள் பயன்படுத்தி லயித்துக்கொள்ளலாம்.
ஆனால், தொழுகையில் இதற்கு இடம் இல்லை.
எடுத்துக் காட்டாக ஒரு பாடலை ஒரு வரிசையில் நிற்பவர்கள் D ஸ்கேலில் பாடினால் அடுத்த வரிசையில் உள்ளவர்கள் BASEல் பாடுவார்கள். இப்படியாகவே பாடல்களை இனிமையாக்கி பாடுவதுண்டு. ஆனால், ஒருவர் பாடுகையில் பின்பாக நின்று ஒரு கூட்டம் ரீங்காரம் இடுவதென்பது அர்த்தமற்றது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக