#1010 - *கர்த்தருக்குப் புதுப்பாட்டைத் தான் பாடவேண்டுமா?*
கர்த்தருக்குப் புதுப்பாட்டை பாடுங்கள் என்ற வசனத்தை முன்னிட்டு, புத்தம் புதிய பாடல்களை பாடுகிறார்கள். பல பாடல்கள் சினிமா மெட்டுகளை அப்படியே அமைந்திருக்கிறது. பழைய பாடல்களை பாடக்கூடாதா? புதிய பாட்டை தான் பாடவேண்டுமா? இதை குறித்த உங்களது விளக்கம் என்ன?
*பதில்* : புதுப்பாட்டை பாடுவதைக்குறித்து முழு வேதாகமத்திலும் அந்த வார்தையானது எட்டு முறை பதிவாகியுள்ளது.
சங். 33:3; 40:3; 96:1; 98:1; 144:9; 149:1; ஏசா. 42:10; வெளி. 14:3 என்ற இடங்களில் காணலாம்.
உதாரணத்திற்கு : எகிப்தில் அடிமையாய் இருந்தபொழுது இயற்றி பாடிய பாடல்களை எகிப்திலிருந்து விடுதலையாகி வனாந்திரத்தில் வானத்து மன்னாவை ருசிபார்த்த வேளையில், “ஆண்டவரே, எங்களை எகிப்தியரின் கைக்கு நீங்கலாக்கும்” என்று பாடமுடியுமோ?
ஒவ்வொரு வசனத்தில் வரும் சூழலை கவனித்தால் அதற்கான அவசியத்தை உணரலாம்.
பாடல்கள் ஒவ்வொன்றும் அந்தந்த சூழ்நிலைக்கேற்ப சந்தர்ப்பத்திற்காக பிரத்யேகமாக இயற்றப்பட்டதாகும்.
பாடலாசிரியர்களின் மனநிலைமை, சூழ்நிலை மற்றும் அவசியத்திற்கேற்ப அந்தந்த சந்தர்ப்பத்தால் பரிந்துரைக்கப்பட்ட சிறப்பு உணர்வுகளை வெளிப்படுத்துவது அல்லது தெய்வீக நன்மை மற்றும் கிருபையின் வெளிப்பாடு.
அந்தந்த சூழல் மாறும் பொழுது அதற்கேற்ப பாடல் வரிகளை நாம் பாடி தேவனை துதிக்கிறோம். (2 நாள. 20:21)
பொதுவான துதி பாடல்கள், ஸ்தோத்திர பாடல்கள் என்பது எக்காலத்திலும் எப்போதும் எச்சூழ்நிலையிலும் பயன்படுத்தமுடியும். மெட்டுகளை அல்ல வார்த்தைகளை சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
”வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே” என்ற ஒரு இனிமையான பாடலை நாம் கிறிஸ்துவிற்கு நேராக ஜனங்களை அழைக்க பயன்படுத்துகிற பாடல்.
”என்னை நேசிக்கின்றாயா…கல்வாரி காட்சியை கண்டபின்னும்…” என்ற ஒரு பாடலை அநேகர் விரும்பி பாடுவார்கள். ஆனால் வரிகளை கவனித்துப் பார்த்தால் அது கிறிஸ்துவானவர் ஜனங்களை நோக்கி பாடுவது போன்ற வரிகள் அவை.
பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு நோக்கம் கொண்டவை.
ஐயோ ! நான் துன்பத்திலும் மரணக்கட்டுகளிலும் சூழ்ந்திருக்கிறேன் என்னை விடுவியும் என்ற ஒரு பாடலை – சகல பிரச்சனைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட பிறகும் அந்த பாடலையே பாடுவது அர்த்தமற்றது. தேவனை நோக்கி புகழ்ந்து பாடி அப்பொழுது அவருக்கு புதிய பாடல் அவசியப்படுகிறது.
பாடல்கள் ஒவ்வொன்றும் தேவனுடைய ஒரு சிறிய பார்வையை மட்டுமே அடக்கிக்கொள்கிறது. நாமோ, அவரைப் பற்றிய புரிதலில் தொடர்ந்து ஆழமாக வளர அழைக்கப்படுகிறோம். யோபு 11:7, ரோமர் 11:33, 1பேதுரு 3:18
காதுகளால் கேட்கும் வார்த்தைகளைக் காட்டிலும் பாடல்களைப் பாடும்போது, தேவனைப் பற்றிய உண்மையையும் அதிகமாகக் கற்றுக்கொள்கிறோம், மனப்பாடம் செய்கிறோம்.
பாடல்கள் சில ஆண்டுகள் பழமையானது என்பதால், அது தேவனைப் பற்றிய நமது அறிவின் ஆழத்தைக் தாழ்த்திவிட்டதாக நினைக்கக்கூடாது.
புதிய பாடல்கள் அதிக விளக்கத்துடன் சத்தியத்தை நமக்கு வலியுறுத்தலாம்.
ஆனால், இக்காலங்களில் மிக அதிகமாக வியாபாரத்தை மையமாக கொண்டு பாடல்களை இயற்றி வேதாகம சத்தியத்தை உணராமல் பாடுபவர்களின் விசுவாசத்தையே கவிழ்த்துப் போடுகிறார்கள்.
சத்தியத்தை விளக்கும் பாடல்கள், விசுவாசத்தை வளர்க்கும் பாடல்கள் போன்றவை காண்பது அரிதாகிப்போனது.
சபை என்ற பெயரில் கச்சேரிகளாக்கப்பட்டு, தேவனை துதிப்பதை மறந்து மக்களை உற்சாகப்படுத்தும் பணியில் பிசாசு அநேகரை விழுங்கியிருக்கிறான்.
தொழுகை என்பது தேவனைப் பற்றியது, நம்மைப் பற்றியது அல்ல. 1 தெச. 5:16-18; சங். 34:1
பழைய சூழல் மாறிவிட்டது ஆகையால் தற்போதுள்ள சூழலை மனதில் வைத்து புதுப்பாட்டை பாடுங்கள் என்று வலியுறுத்தப்பட்டது.
நாம் பாடும் வரிகளை உணர்ந்து கருத்துடன் பாடவேண்டியதே அவசியம். 1கொரி. 14:15.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
*Q&A Book ஆர்டர் செய்ய* :
வலைதளம் :
YouTube “வேதம் அறிவோம்” :
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக