#1004 - *கொர்நேலியு உலகளாவிய திருச்சபை உருவாக எப்படி தன் இல்லத்தை பயன்படுத்தினான்?*
*பதில்* : கொர்நெலியு, நம்மை போல ஒரு புறஜாதியான்.
வேதாகமத்தில் முற்பிதாக்களான யாக்கோபு முதல் பேதுருவின் தரிசனம் (அப். 10:9-17) வரைக்கும், கூடுமான அளவிற்கு இஸ்ரவேலர்களை / யூதர்களையே சுற்றி வருகிறது.
கிறிஸ்துவானவர் யூதர்களை / இஸ்ரவேலர்களை மாத்திரம் இரட்சிக்க அல்ல அவர் உலக ஜனங்கள் அனைவரையும் இரட்சிக்கும்படி வந்தவர். மத். 28:18-19, சங். 22:27-28; 98:2-3; ஏசா. 42:1-4; 49:6; 52:10; 66:18-19; மாற்கு 16:15-16; லூக்கா 24:47-48; அப். 1:8; 13:46-47; 28:28; ரோ. 10:18; கொலோ. 1:23
சபையானது அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் ஸ்தாபிக்கப்பட்டு, சுமார் ஏறத்தாழ 7 வருடங்களில் அப். 10ம் அதிகாரத்தின் நிகழ்வுகள் நடக்கிறது.
முதல் நாளில் (ஆண்களில்) சுமார் 3,000 பேரும் (அப். 2:41), பின்னர் சுமார் 5,000 பேரும் (அப். 4:4), பின்னர் எண்ணுக்கடங்காத அளவில் (அப். 5:14)வேகமாய் வளர்ந்தது கிறிஸ்தவம்.
இரட்சிப்பு யூதர்களுக்கு மாத்திரமே என்று அப்போஸ்தலர்களும் நம்பிக்கொண்டிருந்தனர் (அப். 10:35, 47, 11:1-3, 11:18)
விக்கிரகங்களுக்கு நடுவில் வாழ்ந்த கொர்நெலியு, தேவபக்தியுள்ளவனயும், தான் மாத்திரமல்லாமல் தன் வீட்டாரையும் தேவனுக்கு நேராய் வழிநடத்தினவன். (அப். 10:2)
ஜனங்களுக்கு உதாரத்துவமாய் வாழ்ந்தார். (அப். 10:2)
பயபக்தியுடனும் ஜெபிக்கிறவராயும் இருந்தார். (அப். 10:2)
தான் மட்டுமல்லாது, தன் வீட்டாருமல்லாது, தன்னுடன் வேலை செய்கிறவர்களையும் நல்வழிப்படுத்துகிறவராயிருந்தார். (அப் 10:7)
செசரியாவில் அவர் வசிப்பதால், மேசியாவைப் பற்றிய அவர்களின் எதிர்பார்ப்புகளை அவரிடம் தெரிவித்த யூதர்களுடன் அவரைத் தொடர்புகொள்ளச் செய்திருக்கலாம்.
இதனால் பேதுரு தனக்குக் கொண்டு வந்த செய்தியை வரவேற்கத் தயாரானான்.
இந்த கொர்நெலியு - யூதரல்லாத அனைத்து உலக ஜனங்களுக்கும் கிறிஸ்தவத்தில் முன்னோடி ஆவார்.
தான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதுமல்லாமல் தனது குடும்பத்தினரும் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவிடம் வந்தனர். சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
இப்படியாக, உலக (யூதரல்லாத) கிறிஸ்தவர்களுக்கு கொர்நெலியு ஒரு முன்மாதிரி மற்றும் முன்னோடி மனிதர் ஆவார்.
*பி.கு.* : எவரையும் பகைத்துக்கொள்ளாமல் அனைவரையும் சேர்த்து நாம் உலகலாவிய சபை என்று ஒரு கூரைக்குள் அழைக்க முடியாது.
ஏனென்றால், சபை என்பது ஒன்றே ஒன்று தான். தேவனாகிய கிறிஸ்துவை பிரதிபலிக்கும்படிக்கும், கிறிஸ்துவை பிரதிபலிக்கும்படிக்கு தங்களது ஊர் பெயரை சேர்த்து “சபை” என்றே வேதாகம காலங்களில் அழைக்கப்பட்டது. (அப். 15:30; ரோ. 16:5; 16; 1கொரி. 1:2; 10:33; 11:16; 22; 15:9; 2கொரி. 1:1; கலா. 1:13; 1தெச. 2:14; 2தெச. 1:4; 1தீமோ. 3:5; பிலே. 2; வெளி. 2:1; 8; 18; 3:1; 7; 14)
அந்த சபையானது அப். 2ம் அதிகாரத்தில் கி.பி. 33ம் ஆண்டு துவங்கியது. அதை நிறுவியவர் இயேசு கிறிஸ்து (அப். 20:28; கொலோ. 1:24; எபே. 4:12; 1பேதுரு 1:19).
ஆகவே, கிறிஸ்துவை தலையாகக் கொண்டு அவருடைய கட்டளையை மாத்திரம் கடைபிடித்து அவரது பெயரை பிரஸ்தாபப்படுத்தும் சபையில் (சரீரத்தில்) நாம் இருக்கவேண்டியது. மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்ட கூட்டத்தாரில் இல்லாமல் கிறிஸ்துவின் மூலம் துவங்கப்பட்ட இடத்தில் இருப்பதே வேதாகமத்தின் வலியுறுத்துதலாகும் (ரோ. 7:4).
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக