செவ்வாய், 30 மே, 2023

நாம் சீர்பட்டால் தேசமும் ஜனமும் ஆசீர்வதிக்கப்படும்


 
 
*நாம் சீர்பட்டால் தேசமும் ஜனமும் ஆசீர்வதிக்கப்படும்*
by : Eddy Joel Silsbee

புதிய நாளின் ஆனந்தத்தை நமக்கு தரும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

முழு பட்டணத்திலும் 10 தேவனுடைய பிள்ளைகள் (நீதிமான்கள்) கூட இல்லாதபடியினாலே  சோதோம் கொமோரா அழிக்கப்பட்டு போனது - ஆதி. 18:32

நம் தேசங்கள்;
சுயநலத்திலும்,
பெருமை பேச்சுகளிலும்,
விபச்சாரத்திலும்,
விக்கிரக வழிபாட்டிலும்,
துன்மார்க்கத்திலும்,
சட்ட விரோதத்திலும்,
பொய் பரப்புரைகளிலும்,
தவறான பாதையில் வழி நடத்தும் தலைவர்களும்,
தவறு என்று அறிந்தும் குருட்டாட்டமாய் பின்தொடரும் கூட்டத்தினராலும்  நிரம்பி வருகிறது.

*எமோரியரின்* அக்கிரமம் மிகுதியாவது வரைக்கும் (நிறையும் வரைக்கும்);
*இஸ்ரவேல்* ஜனம் அடிமைத்தனத்தில் இருந்தது. (ஆதி. 15:16)  

எமோரியரின் அக்கிரமம் பூர்த்தியான போதோ முழு தேசமும் இஸ்ரவேலுக்கு கொடுக்கப்பட்டது.

எப்படி உப்பு சிறிதளவே போதுமானதோ, கிறிஸ்தவர்களாகிய நாமும் சிறிதளவு தான் இருக்கிறோம்.

தேசத்தில் நாம் உப்பாக இருக்கிறோம் (மத். 5:13)

மாயையை விட்டு,
பரவசத்தை விட்டு,
கற்பனை கதைகளை விட்டு,
பொய்யான தீர்க்கதரிசிகளின் போதனைகளை விட்டு,
தினமும் பரலோகத்திற்கு போய் வருபவர்களின் நவீன புழுகுமூட்டைகளின் கட்டுகளில் இருந்து விலகி ஓடி,
நேரடியாக ஆண்டவர் எனக்குச் சொன்னார் என்பவர்களின் பொய்யான வார்த்தைகளுக்கு கீழ்படியாமல்;
100க்கு 100 முழுமையாக வெளியாக்கப்பட்டு நம் கையில் கொடுக்கப்பட்டிருக்கும் தேவ வார்த்தையான வேதத்திற்கு செவிசாய்க்கும்படியாக,
தேசம் மனம்திரும்பும்படியான ஒர் எச்சரிப்பாகவே கொள்ளை நோய் உலகம் முழுவதும் அனுமதிக்கப்பட்டது என்று நான் கருதுகிறேன்.

கிறிஸ்தவ மதம் தன் மாயையைவிட்டு கிறிஸ்தவ *மார்க்கத்திற்கு* திரும்பும்படி நம் முழங்கால்கள் ஊக்கமாய் முடங்கட்டும்.

டிவியை பார்த்து அல்ல,
தேவனிடத்தில் கண்ணீர் விடுவோம்… மன்றாடுவோம்.

தேசமும் ஜனமும் செழிக்கும். 2நாளாகமம். 7:14

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India)

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
 
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtube.com/live/Pth0dgS7WS8
 
*Please Subscribe & Watch our YouTube Videos*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக