*ஞாயிறு ஓய்வு நாள் அல்ல - அது வாரத்தின் முதல் நாள்*
by : Eddy Joel Silsbee
கர்த்தருடைய நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துகள்.
சிலருக்கு ஓய்வு நாள், சிலருக்கு 7ம்நாள், *பலர் ஞாயிற்றுக்கிழமையை ஓய்வு நாள் என்று சொல்லிக்கொள்கின்றனர்*.
வேதாகமத்தின்படி, ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் அல்ல. ஒரு வாரத்தில் ஏழு நாட்களே உள்ளது. அதில் ஞாயிறு என்பது வாரத்தின் முதல் நாள். யாத். 31:15
*ஓய்வு நாள் என்பது, சனிக்கிழமை*. யாத். 16:26
கிறிஸ்தவர்கள் ஓய்வு நாளில் அல்ல, வாரத்தின் முதல் நாளில் தேவனைத் தொழுதுகொள்ளும்படி கூடிவரவேண்டும்.
பழைய ஏற்பாடு துவங்கி இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்கும் வரைக்கும் ஓய்வு நாளுக்கு இருந்த முக்கியத்துவத்துவத்தை, கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்கு பின்னர் நாம் ஏன் காண முடிவதில்லை?
*கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையில் தொழுது கொள்ளும்படி கூடிவர வேண்டிய அவசியம் என்ன*?
* இயேசு கிறிஸ்து *வாரத்தின் முதலாம் நாளில்* உயிர்தெழுந்தார் - மாற்கு 16:9
* அவர் உயிர்த்தெழுந்தப்பின் சீஷர்களுக்கு 6 முறை தரிசனமானது *வாரத்தின் முதல் நாளில்* மாற்கு 16:9; மத். 28:5-9; லூக். 24:34; 24:13-15; 24:33,36 + யோவான் 20:19; 26
* இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின்னர் மற்றும் அவர் பரம் ஏறும் வரை கிறிஸ்தவர்கள் கூடினது *வாரத்தின் முதல் நாளில்*. யோவான் 20:19, 26 அப். 2:1
* சபை ஸ்தாபிக்கப்பட்டது *வாரத்தின் முதலாம் நாளில்* அப். 2:1
* பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்களுக்கு கொடுக்கப்பட்டது *வாரத்தின் முதலாம் நாளில்* அப். 2:1-4
* முதல் இரட்சிப்பின் செய்தி பேதுருவால் சொல்லப்பட்டது *வாரத்தின் முதலாம் நாளில்* அப். 2:1, 38 ,40-41
* சீஷர்கள் அப்பம் பிட்கும்படி கூடி வந்தது *வாரத்தின் முதலாம் நாளில்* அப். 20:7
* *வாரத்தின் முதலாம் நாளில்* பணம் (காணிக்கை) சேர்க்கும் படி கட்டளை பெற்றார்கள் 1 கொரி. 16:1-2
ஞாயிற்றுக்கிழமை – ஓய்வு நாள் அல்ல !!
ஓய்வு நாளில் கூடவேண்டும் என்ற கட்டளை சிலுவையில் முடிவு பெற்றது – ரோ. 10:4
வாரத்தின் முதலாம் நாளை விட்டு ஓய்வு நாளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் – அறியாமலேயே பிரச்சினைக்குள்ளாகிறோம். யாக். 2:10
வைராக்கியத்தை விட்டு வேதாகமத்திற்கு செவி சாய்ப்போம்.
வாரத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமைகளில், சிலுவை மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த அந்த கர்த்தருடைய நாளை அசட்டை செய்யாமல் தேவனைத் தொழுதுக்கொண்டு கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூறும்படி கூடிவருவோம்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India)
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtube.com/live/GW-3yE4H8qM
*Please Subscribe & Watch our YouTube Videos*
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக