#1180 - *வட்டிக்கு கொடுப்பது பற்றி கூறவும்*
*பதில்* : வட்டிக்கு கடன் கொடுப்பதென்பது லாபம் ஈட்டுவதற்காக பணத்தை கடனாக கொடுக்கும் தொழில்.
கட்டணத்திற்கு சேவை வழங்கும் வங்கிகள் மற்றும் பிற வணிகங்களில் தவறில்லை (மத்தேயு 25:27).
குறைந்த பட்சம் அத்தகைய விகிதங்களைச் செலுத்தும் வட்டி விகிதத்தை விட மிக அதிகமாக வசூலிக்கும் வணிகங்கள் மற்றவர்களின் இயலாமையை தனது முதலீடாக்குவது தவறு.
சட்டபூர்வமான வணிகங்கள், பொது மற்றும் தனியார் வணிகங்கள் தங்கள் பணத்தின் மீதான வட்டியைப் பெறும் குறிக்கோளுடன் பணத்தை முதலீடு செய்கின்றன.
அத்தகைய ஏற்பாடுகள் தாங்கள் கொடுக்கும் கடனின் விதிமுறைகளை ஒப்பந்தங்களில் ஆவணப்படுத்துகிறது.
ஆனால், ஒருவரது பணத்தேவைக்கும் அவரது நெருக்கடியில் உதவுவதற்காகவும் வழங்கப்படும் முறைசாரா கடனிலும் லாபம் ஈட்ட முனைவது தவறு. லூக்கா 6:30-35
இஸ்ரவேலர்களுக்கு தேவன் கொடுத்த சட்டத்திலிருந்த சில வசனங்களை இங்கு பயன்படுத்துகிறேன். இதன் மூலம் தார்மீக ரீதியாக தேவன் எதிர்பார்க்கும் தன்மையை விளங்கிக்கொள்ளமுடிகிறது:
யாத்திராகமம் 22:25 “உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம்”.
உபாகமம் 23:19-20 கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக. அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும் வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டி வாங்காயாக.
கிறிஸ்து சொல்லியதை லூக்காவின் பதிவில் அறிகிறோம்:
லூக்கா 6:34-35 “திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன்கொடுக்கிறார்களே. உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே”
பணத்தை வட்டியின் மூலம் ஈட்டும் முயற்சியில் உள்ளவர்களை எசேக்கியல் 18:13ம் வசனம் வன்மையாய் கண்டிப்பதையும் அதற்கான பலனையும் அறிவிக்கிறது.
ஆகவே, நீங்கள் ஒருவருக்கு உதவ விரும்பினால், அது ஒரு உன்னதமான விஷயம். தன்னுடைய பணத்தை அவர்கள் சரியாக நிர்வகிக்க தவறியதால் கொடிய விகிதத்தில் கடன் வாங்கும் இடத்திற்கு தள்ளப்படுகிறார்கள் என்பதை உணர வேண்டும். அப்படியென்றால், உங்களது பணத்தை அவர்கள் திருப்பிச் செலுத்தப்படாமல் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் நெருக்கடியில் அவர்களது கூக்குரல் தேவனிடம் எட்டும் போது உங்களுக்கான ஆசீர்வாதம் நிச்சயம் தடைபடும் !! யோபு 34:27-28
சங். 15:5 “தன் பணத்தை வட்டிக்குக் கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை”.
எனவே, நீங்கள் விரும்பி சுதந்திரமாக கொடுக்கக்கூடிய பணத்தை மட்டும் கொடுங்கள்.
*உதாரணமாக : 10 நாட்களுக்குள் கட்டாயம் தந்து விடுகிறேன் என்றும், கைமாத்தாக தந்து உதவுங்கள் என்றும் நம்மிடம் கேட்டு பணம் பெற்றவர்கள் பல வருடங்கள் ஆகியும் திருப்பி தர மனமில்லாதிருந்தால் நம் உள்ளம் எப்படியிருக்கும்? நட்பும் சகோதரத்துவமும் அன்பும் தடைப்படுமே! திருப்பித்தருகிறேன் என்று வாக்குக்கொடுத்தும் தங்கள் வாக்கை மீறும் பொழுது நமது உள்ளம் கொந்தளிக்காமல் இருக்காதே!!* அவர்கள் கொடுத்த வாக்குறுதிக்கும் தேவன் கணக்கு கேட்கிறவர்.
சங். 37:21 துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.
கடன் கொடுக்கும்போது தம் பிள்ளைகள் நேர்மையாக செயல்பட வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். நாம் பெற்ற செல்வம் தேவனிடமிருந்து தான் வருகிறது (உபாகமம் 8:18).
நமது வறுமையும் செல்வமும் தேவனுடைய பார்வையிலிருந்து தப்புவதில்லை.
கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர். (1 சாமுவேல் 2:7).
ஆகவே, சட்டப்பூர்வமாகப் பணத்தைக் கடனாகப் பெற்று, நியாயமான வட்டி விகிதத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை.
பணம் கடன் வாங்குவதை வேதம் வெளிப்படையாக தடை செய்யவில்லை என்றாலும், அதை ஊக்குவிக்கவில்லை. கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை. நீதி. 22:7
ஆகவே, கடன் கொடுப்பவர்களைச் சார்ந்திருப்பதை விட, தேவைகளுக்காக நாம் தேவனையே பார்க்க வேண்டும்.
ஒருவருக்கு கடன் கொடுக்கும்போது, அந்த நபரின் கடன் சுமையை அதிகரித்து, அவர் தடுமாறுவதை எளிதாக்குகிறோம்.
தேவைப்படுபவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பது தேவனுடைய கட்டளை. (லூக்கா 6:38). அதில் லாபம் ஈட்ட நினைக்கும் போது வேதனை மிஞ்சும்.
எசேக்கியல் 18:8-9 “வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன் கையை விலக்கி, மனிதருக்குள்ள வழக்கை உண்மையாய்த் தீர்த்து, என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்”.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
வியாழன், 2 மார்ச், 2023
#1180 - வட்டிக்கு கொடுப்பது பற்றி கூறவும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக