#1162 - *இயேசு கிறிஸ்துவின் பிறந்த தேதி அல்லது பிறந்த நாளை வேதத்தில் ஏன் சொல்லப்படவில்லை?*
*பதில்* : மனிதர்கள் பரலோகம் வரை போவதற்கு தேவையானதை மாத்திரமே வேதம் பதிவு செய்திருக்கிறது.
தேவனை நம்புவதற்கு அவசியமானதும், வாழ்வில் எப்படிப்பட்ட போராட்டங்கள் வந்தாலும் தேவன் மீதுள்ள விசுவாசத்தில் உறுதியாய் நிற்பதற்கு தேவையான சகல நிகழ்வுகளும், எவ்விதமான தவறுகளையும் தேவன் வெறுக்கிறார் என்றும் அதற்கு தண்டனை உண்டு என்றும் மனிதர்கள் நாம் புரிந்துக்கொள்ளும்படியும் வேதாகமத்திலுள்ள தகவல்களை நாம் காணமுடிகிறது.
நமக்கு முக்கியமாக தோன்றுகிறதும், விசுவாசத்திற்கென்று அவசியமற்ற தகவல்களை நாம் வேதாகமத்தில் காணமுடியாது. எடுத்துக்காட்டாக சில தகவல்களை எழுதுகிறேன் கவனிக்கவும்:
1-இயேசு எந்த வீட்டில் பிறந்தார் என்ற தகவல் கொடுக்கப்பட்டிருந்தால் அந்த வீட்டையே இன்று பெரிய புனித ஸ்தலமாக்கியிருப்பர்
2-சபை ஸ்தாபிக்கப்பட்ட நாளன்று பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்கள் மீது ஊற்றப்பட்ட இடம் எது என்று வேதாகமத்தில் குறிக்கப்பட்டிருந்தால் அந்த இடம் இன்று வசூல் வேட்டையில் முதலிடம் பிடித்திருக்கும்
3-மோசேயை அடக்கம் பண்ணின இடத்தை வெளிப்படுத்தியிருந்தால் இஸ்ரவேலர்களது பிரதான புண்ணிய ஸ்தலமாகியிருக்கும்
4-எந்த மரத்தில் இயேசுவின் சிலுவை செய்யப்பட்டது என்ற தகவல் இருந்தால் – அந்த மரவகை இன்று வியாபாரத்தில் களைகட்டியிருக்கும்
5-முதல் 12வயது வரையும் பின்னர் 30வயது வரையும் இயேசு எங்கு குளித்தார், என்ன சாப்பிட்டார் எப்படி இவ்வளவு படிப்பறிவை வளர்த்துக்கொண்டார் என்று எழுதிவைத்திருந்தால் அந்த முறையையே புனிதம் என்று அநேகரை முனிவர்களாக்கியிருப்பர்
இப்படி ஏராளம் ஏராளம் காரணங்களை சொல்லமுடியும்.
இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது. யோவான் 20:31
தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். யோவான் 3:15
என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 5:24
தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; …. தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். 1யோவான் 5:10-12
இயேசுவை கிறிஸ்து என்று விசுவாசித்து, மனந்திரும்பி, விசுவாசத்தை அறிக்கையிட்டு, பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்துவின் சரீரத்தில் இணைந்திருப்பவர்களோடு இணைந்து வாரந்தோரும் கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூர்ந்து சத்தியத்தின்படி நமது மரணம் வரைக்கும் அல்லது கிறிஸ்துவின் வருகை வரைக்கும் நாம் வாழ்வதே நம்மை பரலோகம் கொண்டு சேர்க்கிறது.
பண்டிகைகள் கேலி கூத்துகள் கொண்டாட்டங்கள் அனைத்தும் வேதத்தின் பாதையிலிருந்து நம்மை வெளியே கொண்டு செல்வது மாத்திரமல்ல, பரலோகத்தையே நாம் இழக்க நேரிடும்.
இயேசு பிறந்தது உண்மை தான். அது சரித்திரம். அதை எவராலும் மாற்ற முடியாது. ஆனால் அவர் பிறந்ததை கொண்டாடுங்கள் என்றோ அல்லது கொண்டாடினதாகவோ சுமார் 70 ஆண்டு சரித்திர நிகழ்வுகளில் எங்கும் காணமுடியாது.
இயேசு பிறந்து விட்டார் என்று டிசம்பர் 25ந் தேதியை நிர்ணயித்தது வேதத்திற்கு விரோதமாக நடக்கும் மதத்தினர்.
அதில் கிறிஸ்துமஸ் மரத்தை வைத்தது வியாபாரிகள்.
மரத்தில் பரிசுகளை தொங்கவிட்டது வியாபாரிகள்.
சிவப்பு உடையணிந்து ஆட்டம் போட வைத்தது வியாபாரிகள்.
கிறிஸ்துமஸ் கேக்கை உட்புகுத்தியது வியாபாரிகள்.
சாஸ்திரிகளை மூவராக்கியது வியாபாரிகள்.
சாஸ்திரிகளை பிறந்த குடிலில் கொண்டு வந்து காட்சிபடுத்தியது வியாபாரிகள்.
இதற்கும் வேதத்திற்கும் என்ன சம்பந்தம்?
பேசும்படி சொன்னதற்கு, பழக்க தோஷத்தில் கன்மலையை அடித்த மோசே காணான் தேசத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
ஆகவே விசுவாச பாதையில் நடக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு கடைபிடிக்கும் எந்த செயலிற்கும் வேதாகமத்தில் ஆதாரம் இல்லையெனில் பரலோக பாதையை இழக்காதபடிக்கு நாம் விலகியிருப்போம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
சனி, 24 டிசம்பர், 2022
#1162 - இயேசு கிறிஸ்துவின் பிறந்த தேதி அல்லது பிறந்த நாளை வேதத்தில் ஏன் சொல்லப்படவில்லை?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக