சனி, 19 நவம்பர், 2022

#1158 - கல்லெறி தூரம் என்றால் எவ்வளவு?

#1158 - *கல்லெறி தூரம் என்றால் எவ்வளவு?* லூக்கா 22:41ல் இயேசு கிறிஸ்து “அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:” என்றுள்ளதை விளக்கவும்.

*பதில்* : குறுகிய தூரத்திற்கான உருவகச் சொல் இது.

வேதாகம கண்ணோட்டத்தில் சொல்லவேண்டுமானால் இரண்டு எளிய விளக்க விதிகளை காணலாம்.

முதலாவது: கல்லெறி தூரம் என்ற இந்த பொதுவான சொல் அதை எறியக்கூடிய நபரைப் பொறுத்து மாறுபடும். ஒரு சிறு குழந்தை ஒன்றை சிறிது தூரம் மட்டுமே வீச முடியும் ஆனால் பயிற்சி பெற்றவரோ அதிக தூரம் வீசுவர். கல்லின் அளவு மற்றும் எறிபவரின் வலிமை இறுதி தூரத்தை நிறுவுகிறது.

இரண்டாவதாக, இதே நிகழ்வைக் குறித்த மத்தேயுவின் பதிவில் "அவர் சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து, ஜெபம் செய்தார்..." (மத். 26:39) என்றும் மாற்குவின் பதிவில் "அவர் சற்று அப்புறம்போய், தரையில் விழுந்து, ஜெபம் செய்தார்..." (மாற்கு 14:35) என்றுமுள்ளது.

லூக்காவின் பதிவின்படியுள்ள “கல்லெறி தூரம்” என்பதை மற்ற பதிப்பாளர்கள் இரண்டு முறை "சிறிது" தூரம் என்றே வரையறுக்கிறது.

ஆகவே, இயேசுவுக்கும் அப்போது அங்கிருந்த அப்போஸ்தலர்களுக்குமான (பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான்) துல்லியமான இடைவெளி ஒரு பொருட்டல்ல. ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் சரியான அளவீட்டை நமக்கு இங்கு தெரியப்படுத்தவில்லை.

மத். 26:40-41ம் வசனத்தை கவனிக்கும்பொழுது அவர்களது செவிக்கு எட்டிய தூரத்தில் இயேசு ஜெபித்திருக்கலாம். மத். 26:40-41 “பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது *என்னோடேகூட* விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்”.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக