ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

#1150 - பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; என்று இயேசு ஜெபம்பண்ணினாரே… அப்படியென்றால் அவருக்கு சிலுவையில் மரிப்பது பிரியமில்லாததாயிருந்ததா? லூக்கா 22:42

#1150 - *பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; என்று இயேசு ஜெபம்பண்ணினாரே… அப்படியென்றால் அவருக்கு சிலுவையில் மரிப்பது பிரியமில்லாததாயிருந்ததா*? லூக்கா 22:42

*பதில்* :   சிலுவையில் மரிப்பது அவசியம் என்பதை இயேசு புரிந்துகொண்டார், ஆனால் அவர் செய்ததை அவர் சுகமாய் அனுபவித்தார் என்று அர்த்தமல்ல.

இயேசு கிறிஸ்துவின் இந்த ஜெபத்தில் இரண்டு அத்தியாவசியத் தகுதிகள் மற்றும் சூழல் அர்த்தங்கள் உள்ளன.

முதலில், "உம்முடைய சித்தமானால்" என்று ஜெபிக்கிறார். லூக். 22:42

அவரது ஜெபத்தைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் வேறு வழியில்லை என்பதைக் காட்டுகின்றன. உலகத்தை மீட்க இயேசு கிறிஸ்து மட்டுமே சாத்தியமான பலி என்பதை இது தெளிவு படுத்துகிறது. யோவான் 1:29; அப்போஸ்தலர் 4:12; எபிரெயர் 10:14; வெளிப்படுத்துதல் 5:9.

இரண்டாவதாக, “என்னுடைய சித்தம் அல்ல, உமது சித்தமே நிறைவேறட்டும்” என்று இயேசு ஜெபிக்கிறார்.

இயேசு தேவன்.
உடல், மனம் மற்றும் ஆன்மாவின் விருப்பத்திற்கு உறுதியளித்தார். நீதிமான்களின் ஜெபம் எப்பொழுதும் தேவனுடைய சித்தத்தைச் சார்ந்தது (மத்தேயு 6:10).

கெத்செமனேயில், தேவதிட்டத்திற்கு ஆர்வமாகவும், தீவிரமாகவும், மனப்பூர்வமாகவும் அடிபணிவதன் மூலம் தந்தைக்கு அடிபணிதல் எப்படி இருக்கும் என்பதை இயேசு நிரூபித்தார்.

நாம் சோதனைகளை எதிர்கொள்ளும்போது, நாம் என்ன செய்கிறோம் என்பதை இயேசு அறிவார். ஏனென்றால் அவர் மனித சோதனை மற்றும் பலவீனத்தின் முழு அளவையும் அனுபவித்தவர். ஆனால், அவர் ஒருபோதும் பாவம் செய்யவில்லை.

ஆகவே தான் இயேசு நம்முடைய உண்மையுள்ள பிரதான ஆசாரியராக இருக்கிறார். அவர் தம்முடைய மக்களுக்காகப் பரிந்துபேசவும், தம்முடைய கிருபையின் சிங்காசனத்திற்கு முன்பாக அவர்களை வரவழைக்கவும் வாழ்கிறார் எபிரெயர் 2:17-28; 4:14-16.

மேலும், யோவான் 12:20-28 இல், சில கிரேக்கர்கள் பிலிப்புவை அணுகி இயேசுவைப் பார்க்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் வந்தனர். பிலிப்பு அதே ஊரைச் சேர்ந்த அந்திரேயாவனுடம் இந்த கோரிக்கையுடன் செல்கிறார் (யாக்கோபு 1:44). அவர்கள் இருவரும் இயேசுவை அணுகுகிறார்கள்.

இயேசுவைப் பார்க்க வந்த கிரேக்கர்களின் விருப்பத்திற்கும், யூத மத தலைவர்கள் இயேசுவை காணவேண்டும் என்ற நோக்கத்திற்கும் உள்ள வேறுபாட்டைக் கவனியுங்கள்.

சீஷர்கள் தங்களது இந்தக் கோரிக்கையை இயேசுவிடம் கூறும்போது, யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் இடையிலான பிளவு முடிவுக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்று இயேசு கூறுகிறார் (யோ. 12:23-24). அதாவது இயேசு மகிமைப்பட வேண்டிய நேரம் இது.

ஆனால் இது நடக்க ஒரு மரணம் நிகழ வேண்டும்.

ஒற்றை கோதுமை மணியானது தான் இறக்கும் வரை எவ்வாறு தனிமையில் இருக்கிற நிலையுள்ளதோ அது போல் அதிக தானியங்களை விளைவிக்க வேண்டுமெனில் அந்த கோதுமை இறந்து (பூமியில் புதைக்கப்பட்டு முளைக்கும் போது) புதிய செடியையும் அதில் மணிகளையும் உருவாகுவது போல, இயேசு இறக்க வேண்டும்.

இவ்வுலகில் தனது ஜீவனுக்கு முதலிடம் கொடுத்தால் அதை இழக்கவே நேரிடும்.

பூமிக்குரிய வாழ்க்கையை முதன்மைபடுத்தாதிருந்தால் மாத்திரமே நித்திய ஜீவனைப் பெற முடியும் (மத்தேயு 10:39; 16:25; மாற்கு 8:35; லூக்கா 9:24; 17:33).

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இயேசு தம்முடைய சீஷர்களுக்குப் பின்பற்றக் கற்றுக் கொடுத்த அதே வார்த்தைகள் அவருடைய சொந்த வாழ்விலும் காண்பிக்கின்றார்.

வரவிருக்கும் அவரது மரணத்தைக் குறித்து கவலைப்பட்டதாக ஒப்புக்கொள்கிறார். இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களைக் கடைப்பிடிக்கச் சொன்ன கொள்கை தேவ மகனுக்குக் கூட கடினமாக இருந்தது. இருப்பினும், அதைத் தடுக்க பிதாவிடம் கேட்க முடியாது.

ஏனென்றால் அவர் மனிதகுலத்திற்காக இறப்பதற்காகவே உலகிற்கு வந்தார்.  யோ. 6:38; எபி. 10:9-10, யோ. 12:27

இயேசு கெத்சமெனே தோட்டத்திற்குள் நுழைந்து, தம்முடைய நெருங்கிய சீடர்களுடன் தனியாக இருந்தபோது, தாம் உணர்ந்த வேதனையை வெளிப்படுத்தினார் (மத்தேயு 26:36-38).

கிட்டத்தட்ட துக்கத்தில் மூழ்கியிருப்பதைக் குறிக்க அவர் வருத்தப்பட்டார் எனலாம். அது அவரை ஏறக்குறைய மரணதிகிலடையச் செய்தது (சங்கீதம் 116:3).

அவர் முகங்குப்புற விழுந்து, இந்த உபத்திரவம் அகற்றப்பட்டால் நலமாயிருக்குமே  என்று ஜெபித்தார். ஆனாலும், பிதாவின் சித்தத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்தார் (மத்தேயு 26:39).

இது ஏற்கனவே இயேசு முன்பு குறிப்பிட்ட ஒரு வார்த்தையும் கூட. (யோவான் 12:27; எபிரேயர் 5:6-8).

தம்முடைய மரணத்தின் தேவையை நீக்குவது உட்பட பிதாவினால் எதையும் சாதிக்க முடியும் என்பதை இயேசு அறிந்திருந்தார். தனது விருப்பமல்ல, பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்ததால், இயேசுவை பெலப்படுத்த பிதாவானவர் ஒரு தூதனை அனுப்பி பெலப்படுத்துகிறார் என்று அறிகிறோம். லூக்கா 22:43

அவரது சோதனையோ நீக்கப்படவில்லை, ஆனால் அவர் மீதான சோதனையை எதிர்கொள்ளத் தேவையான ஊக்கம் அவருக்கு வழங்கப்பட்டது (லூக்கா 22:42-43).

நமக்கான பாடம் என்னவென்றால், தேவனுக்குக் கீழ்ப்படிவது எப்போதுமே சுகமாகவோ இலகுவாகவோ மனரம்மியமாகவோ அல்லது சுலபமாகவோ இருக்காது. அவரது சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து நாம் ஜெபிக்கும் போது நமக்கு சங்கடங்களும் வேதனைகளும் வந்தாலும், தேவன் அதினூடே நமக்கு வெற்றியைத் தருவார்.

கிறிஸ்து 100க்கு 100 சதவீதம் தன்னை பிதாவிற்கு ஒப்புக்கொடுத்ததன் பலனை நாம் பிலிப்பியர் 2ம் அதிகாரம் 8ம் வசனத்திலிருந்து படிக்கிறோம்.
பிலிப்பியர் 2:8-11அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக