*வேதாகமத்திலுள்ள ஞானஸ்நானங்களின்
பட்டியல்*
by
: Eddy Joel Silsbee
திருமுழுக்கினால்
நம்மை இரட்சித்த கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.
புதிய
ஏற்பாட்டில் பதியப்பட்டுள்ள ஞானஸ்நான
வகைகளை இன்று பட்டியலாக பார்க்கலாம் :
1-பேரழிவிலிருந்து
மீட்கப்பட்ட நோவா உட்பட 8
பேரும் கடந்து வந்த சம்பவம் - ஞானஸ்நானத்திற்கு
ஒப்பிடப்பட்டுள்ளது. 1பேதுரு
3:20-21
2-வெட்டாந்தரையாய்
சிவந்த
சமுத்திரத்தில் இஸ்ரவேலர்கள்
கடந்து வந்தது - ஞானஸ்நானத்திற்கு
ஒப்பிடப்பட்டுள்ளது. 1கொரி.
10:1-2
3-பாவத்தை அறிக்கையிட்டு
மனந்திரும்புதலுக்கென்று
கொடுத்த யோவான்ஸ்நானின் ஞானஸ்நானம். மத்.
3:5-6, 11; மாற்கு 1:4;
லூக்கா
3:6; அப்.
19:4
4- தேவனுடைய நீதியை நிறைவேற்றும்படி
யோவான் ஸ்நானனிடம் இயேசு கிறிஸ்து எடுத்துக்கொண்ட ஞானஸ்நானம். மத்.
3:15
5-கிறிஸ்துவை
ஏற்றுக்கொள்ளாதவர்களை
சுட்டெரித்து அழிப்பது அக்கினி ஞானஸ்நானம். மத் 3:11-12;
லூக்.
3:16-17 (அக்கினி
ஞானஸ்நானத்திற்காய் ஏங்குபவர்கள் வசனங்களை வாசிக்கவும்)
6-சிலுவையில் நமக்காக கிறிஸ்து
மரித்தது
ஞானஸ்நானத்திற்கு ஒப்பிடப்படுகிறது.
மத் 20:22-23; மாற்கு 10:38-39;
லூக்கா
12:50
7-அப்போஸ்தலருக்கு
கொடுக்கப்பட்டது பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானம் – அப். 2:17-18
8-ஒரு
குறிப்பிட்ட யூத மார்க்கத்தினர், ஒருவன் பாவத்தோடு மரித்திருந்தாலும்
எப்படியாவது பரலோகம் அனுப்பி வைத்து விடவேண்டும் என்ற குருட்டு நம்பிக்கையில்; வசனத்தைக்
கேட்டு, விசுவாசித்து, மனந்திரும்பி, அறிக்கையிட்டு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லாத
மரித்த
உடலுக்கு ஞானஸ்நானம் கொடுத்த சம்பவத்தை 1கொரி.
15:29ல்
பார்க்கலாம்.
9-நாம்
அனைவரும் எடுக்கவேண்டுமென்று கட்டளையாய் கொடுக்கப்பட்ட
ஞானஸ்நானமோ
*பாவ மன்னிப்பிற்கென்று* கொடுக்கப்படுகிறது
–
மாற்கு 16:16,
அப். 22:16, 2:38
ஏறத்தாழ 15
வகை
மறைமுகமாக சொல்லப்பட்டாலும், மேலே கூறியவை நேரடியான அர்த்தம் உள்ளவைகள்.
வேதம்
நமக்கு கற்பிக்கும் *“ஒரே
ஞானஸ்நானம்”* என்பது – மேற்கூறிய பட்டியலில்
9வது
!!
அந்த
உன்னதமான கட்டளைக்கு கீழ்படியாமல் இன்றும் நீங்கள் முரண்டு பிடிப்பீர்களோ?
*பாவமன்னிப்பிற்கென்று
நீங்கள் ஞானஸ்நானம் எடுத்துவிட்டீர்களா?*
தேவனுடைய
இராஜ்யத்தில் இன்றும் காலம் இருக்கிறது !! தாமதிக்க
வேண்டாம்.
*எடி
ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு
உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய
(locked group)* :
https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக