சனி, 21 மே, 2022

பட்டினியோ நிறைவோ – சத்தியத்தில் நிலைத்திருப்போம்

 


*பட்டினியோ நிறைவோ – சத்தியத்தில் நிலைத்திருப்போம்*

by : Eddy Joel Silsbee

 

ஆறுதலின் தேவன் தாமே ஆறுதல்படுத்துவாராக.

 

ஆயுசு நாட்கள் எவருக்கும் நிலையானது அல்ல. நம்முடைய நாட்கள் இந்த பூமியில் எவ்வளவு என்பதை எந்த மனிதனும் அறியமுடியுமோ? சங். 39:4

 

அப்படிப்பட்ட ஞானத்தின் இருதயம் வேண்டி மோசே தேவனிடம் விண்ணப்பித்தார். சங். 90:12

 

உலகமே கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்நாட்களில், ஒரு நாளை கடந்து மறுநாள் ஜீவனோடு விழிப்பது பூரணமான தேவ ஆசீர்வாதம். 1பேதுரு 1:24

 

யார் இந்த நிகழ்வை தள்ளிவைக்க முடியும்? சங். 89:48

 

Busyயாக ருசியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தவனுடைய கையானது, தன் வாய்க்கு நிறைவான ஆகாரத்தை எடுத்துச் செல்லும் இடைவெளியில்;

 

ஏதாவது தவறி விழுந்துவிடாதோ என்ற ஏக்கத்தோடு இருந்தவனும், நிறைவாய் தன் வயிற்றை நிரப்பினனேயானாலும்; (லூக்கா 16:21, 23)

 

சகல நிர்வாகத்தோடும், சுகத்தோடும் வாழ்ந்தாலும், ஆகாரம் இல்லாமல் கஷ்டப்பட்டாலும், அனைத்து தரப்பினரும் ஒரே அளவிலேயே வைக்கப்படுகிறார்கள். யோபு 21:23, 25-26

 

ஆயுசு உள்ள வரை தேவனுக்கென்று உழைப்போம்.

உண்மையைப் பற்றிக்கொள்வோம்.

சத்தியத்தில் நிலைத்திருப்போம்.

 

உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.  பிலி. 4:8

 

கணவனையும், மனைவியையும், பிள்ளைகளையும், பெற்றோரையும், சகல உறவுகளையும் தந்திருக்கும் காலத்தை உதாசீனப்படுத்தாமல்; அன்பை வெளிப்படுத்தி, தேவ வார்த்தையில் நிலைத்திருப்போம். 1யோ. 4:20

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CipEwcIaOMw115vmBx0riS

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/dKl-tIxYH1c

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக