*குற்றஞ்சாட்டுவது தேவக்குணம் அல்ல*
by : Eddy Joel Silsbee
மன்னிப்பின் சிகரமாகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
கையும் மெய்யுமாய் பிடிக்கப்பட்ட பெண்ணை ஊரெல்லாம் குற்றப்படுத்தியபோது, இயேசு கிறிஸ்துவானவர், அவளை பார்த்து; “போ, *இனி பாவம் செய்யாதே”* என்றார். (யோ. 8:11)
38 வருஷமாய் வியாதியாய் இருந்தவனை இயேசு கிறிஸ்து குணமாக்கியதும், கேடு ஒன்றும் வராதிருக்க, *“இனி பாவம் செய்யாதே”* என்றார். (யோ. 5:14)
தன்னையே தெரியாது என சத்தியம் செய்யப்போகிறார் என்றறிந்தும், பேதுருவை பார்த்து *“நீ திடன்கொண்டபின் என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்”* இயேசு கிறிஸ்து... (லூக். 22:32)
ஆம்..
*தவறை* சுட்டிக்காட்டி,
குற்றஞ்சாட்டுவது
தேவனுக்குரிய தன்மை அல்ல…
அதை *நினையாமலிருப்பதே அவருடைய சுபாவம்*.
திருந்திய பின்னரும்,
பழைய தவறுகளை எப்போதும் சுட்டிக்காட்டி
குற்றப்படுத்துவதும்,
நினைவுகூர்வதும் “*பிசாசின் செயல்*” -வெளி. 12:10
பழைய குற்றங்களை நினைவுப்படுத்தி இன்றும் மட்டந்தட்டும் குணம் நம்மில் பலருக்கு உண்டு.
தேவனுடைய பிள்ளைகளுக்கு அந்த குணம் ஆகாதது என்பதையறிந்து அப்படிப்பட்ட எண்ணங்களை களைந்து, கிறிஸ்துவின் அடிச்சுவட்டையே பின்பற்றுவோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/CRFI38hPrYd9jomqUovH4s
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக