*வேதம் தூசி தட்டப்படவேண்டிய நேரம் இது*
by : Eddy Joel Silsbee
ஜீவனுள்ள வார்த்தையாகிய ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
தேவ வார்த்தை சொல்லப்பட்ட போது, *கேட்டவர்களின் இருதயம்* கொழுந்து விட்டு எரிந்ததாம்.. (லூக். 24:32)
வசனத்தைக் கேட்டவர்கள்
1-உணர்வடைந்தார்கள்...
2-போய் சொன்னார்கள்...
3-சாட்சி பகிர்ந்தார்கள்.
ஆனால், எந்த பக்கமும் வளர்ச்சியடைய விடாமல் அநேகரை கெர்ச்சிக்கிற சிங்கமாக விழுங்கி வருகிறான் பிசாசு.
வேதம் சகலமும் அறிந்த நினைவில் …
எழுச்சி என்ற பெயரில்…
வேதத்தை மூடி வைத்து விட்டு...
வசனத்தை கேட்க நேரமில்லாமல்…
வசனத்தை படிக்கவும் நேரமில்லாமல்…
கற்றுக்கொள்ளவும் மனமில்லாமல்…
சொந்த அநுபவங்களிலும்…
உணர்ச்சிகளிலும்…
பரிசுத்த ஆவியானவரின் பெயரைச் சொல்லி…
தேவனையே தூரப்படுத்தி வைத்திருக்கும் கண் சொருகிபோன காலங்களாக பரவிவிட்டது…
கவனம்.
எது சரி, எது தவறு என்று *எதனுடன் ஒப்பிட்டு பார்த்து சரி செய்வது?*
எழுச்சி அவசியமே.
ஆனால் அது வெறும் உணர்ச்சி பொங்கி இருக்கிறதேயன்றி வேதத்தின் சத்தியத்தை அதில் காண முடியவில்லை..
தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள ஏதுவாக,
வசனத்தை வளைத்து
தேவ வார்த்தைக்கு கீழ்படியாமல்,
தேவ வார்த்தையின்படி கடைபிடிக்காமல்
தெளிவாய் சுய செயல் மறைக்கப்பட்டுள்ளது...
விழிப்போடு இருப்பது அத்தியாவசியம்.
சகல நடவடிக்கையையும் வேதத்துடன் மாத்திரமே ஒப்பிட்டு பார்ப்போம்...
நாம் ஓடுகிறதும் பிரயாசப்படுகிறதும் வீணாகாமல், நன்மையை நித்தியத்தில் பெற்றுக்கொள்வோம்.
இந்த நாளையும் தேவன் நமக்கு தந்தது எவ்வளவு ஆசீர்வாதம். அவரையே சார்ந்து வாழ்வோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/CRFI38hPrYd9jomqUovH4s
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக