*உத்திரத்திலுள்ளதை பிடிக்க முயற்சித்து கக்கத்தில் உள்ளதை இழக்கவேண்டாம்*
by : Eddy Joel Silsbee
சமாதான கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
* அழகிய சொந்த தோட்டம் இருந்தது. ஆதி. 2:9
* தனது சரீரத்திலிருந்து எடுக்கப்பட்ட சொந்த தனது எலும்பைக் கொண்டு உருவாக்கப்பட்டு, தேவனாகிய கர்த்தரால் நேரடியாய் கொண்டு வந்து விடப்பட்ட மனைவி இருந்தாள். ஆதி. 2:22
* சுமாராக உழைத்தாலே அள்ளி விளைந்த பழங்கள், காய் கறிகள் இருந்தது. ஆதி. 2:15
* எதை விதைத்தாலும் அதற்கு ஏற்ப ஆரோக்கியமாய் விளைச்சலை தந்த மண் இருந்தது. ஆதி. 3:17
* எல்லா மிருகமும் கூட நட்போடு பழகின சூழ்நிலை இருந்தது. ஆதி. 2:20
* கடவுளோடு நேர்முகமாய் நண்பனை போல பேசும் வாய்ப்பு இருந்தது. ஆதி. 2:15-25
* சுகமான வேதனையில்லாத வாழ்வு இருந்தது. ஆதி. 2:21
* அடுத்த நாள் என்ன செய்ய வேண்டும் என்கிற கவலை இல்லாமல் இருந்தது. ஆதி. 2:16
* ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இத்தனை கையிருப்பு இருந்தும்;
*“இல்லாததை தேடினதால்... உள்ளதும் பறி போனது”* !!
இவ்வாறே நம்மில் பலரும், கொடுக்கப்பட்டுள்ளதை மறந்து, விட்டு, உதாசீனப்படுத்தி;
இல்லாததை கற்பனையில் வளர்த்துக்கொண்டு ஏமாந்து, நொந்து, கோபப்பட்டு, வெறுப்படைவதால் *இருப்பதையும் இழந்து விடுகிறோம்* !!
ஏதேன் தோட்டத்தில் இருந்து வெளியே சென்றபின் ஆதாம் தனது 9வது தலைமுறையான லாமேக்குக்கும் இவைகளை சொல்லிச் சொல்லி எவ்வளவு வருத்தப்பட்டு இருப்பார்.. ? ஆதி. 5:4
நம் வாழ்கையில் இது முதன்மையான பாடம் என்று நமக்கு தோன்றுவதில்லையோ !! (ஆதி. 2,3)
எப்படிப்பட்ட வாழ்க்கையில் நாம் தற்போது இருந்தாலும் அது தேவன் நமக்கு அனுமதித்த ஏதேன் தோட்டம்.
சந்தேக கேள்வியை எழுப்பின போது - *தேவ வார்த்தையின்படி சிந்திக்காமல் சொந்த புத்தியில் அதீதமாக சிந்தித்ததால்* பிசாசின் வளையில் சிக்கி, தடுக்கப்பட்டதை புசித்து சொந்தக் குடும்பத்தை மாத்திரமல்ல *முழு வம்சத்தையும்* சாபத்திற்குள்ளாக்கின சம்பவத்தை இன்னும் உணராமல் இருந்தால் தேவனால் கொடுக்கப்பட்ட ஏதேன் போன்ற வாழ்க்கை கேரூபீன்களால் அடைக்கப்பட்டுப்போம். ஆதி. 3:24
வைராக்கியம், கோபம் எல்லாவற்றையும் விட்டு தேவனுக்கு முன்பதாக சொந்த கைகளை இறுகக் கட்டி தாழ்த்தி விழுந்து பணிந்து தேவனிடத்தில் சாஷ்டாங்கமாய் நாம் ஒப்புரவானால் நிச்சயம் மீட்டு ஆசீர்வதிப்பார்.
தேவனுக்கு முன்னாக தாழ்மைப்படுபவர்கள் முழங்காலில் நின்றார்கள், மார்பில் அடித்துக்கொண்டார்கள், சாஷ்டாங்கமாக தரையோடு வயிறு ஒட்ட விழுந்தார்கள், பேச்சு மூச்சு இல்லாமல் தொன்டை விக்கி மொளனமாக அழுதார்கள்.
சிலுவையில் மரிக்கும் வரைக்கும் தன்னை முற்றுலுமாய் தாழ்த்தினவர் இயேசு கிறிஸ்து. ஆகவே, பிதாவானவர் அவரை உயிரோடு எழுப்பி தனது வலது பாரிசத்தில் உட்கார வைத்துக்கொண்டார் (பிலி. 2:8-9)
ஆகவே, நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையானது தேவன் கொடுத்தது என்பறையறிந்து சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டு தேவ வார்த்தைக்கு கீழ்படிந்து கசப்புகளையும் பிடிவாதங்களையும் களைந்து ஆசீர்வாதங்களை அங்கீகரித்து சந்தோஷத்தை களைந்து விடாமல் வாழக்கற்றுக்கொள்வோம்.
இருக்கும் அசீர்வாதத்தை அறியாமலிருந்தால் உள்ளதும் பறிப்போகும்.
இதை வாசிக்க / கேட்க நமக்கு சுவாசம் இருந்தால் உணர்ந்து மனந்திரும்ப இன்றும் வாய்ப்பு உள்ளது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/CRFI38hPrYd9jomqUovH4s
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக