ஞாயிறு, 20 மார்ச், 2022

அரசியல் அங்கீகாரம் தேடும் கிறிஸ்தவன்

*அரசியல் அங்கீகாரம் தேடும் கிறிஸ்தவன்*

by : Eddy Joel Silsbee

 

நேர்மையானவர்களை விரும்பும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

நாம் தவறு செய்யவேண்டுமென்று சமாதானத்தை குலைக்க முயற்சி செய்வான் பிசாசு.

 

சமுதாய சூழ்நிலைகள் நிமித்தம் ஒருபோதும்

வாழ்க்கையிலோ, ஊழியத்திலோ,

கிறிஸ்தவர்களாகிய நாம் பாதை மாறக் கூடாது.

 

எந்த காலத்திலேயும் உலகமானது

*தேவனுடைய ஜனங்களுக்கு விரோதமாகவே இருந்தது*

என்பதால் “கிறிஸ்துவின் வருகை” வரை எவ்வகையிலும் நமக்கு உபத்திரவம் இருக்கும் என்பதை அறிந்துக்கொள்ளலாம்.

 

கிறிஸ்தவர்களை காப்பாற்றும்படிக்கு சட்டமன்றத்திலேயும், நாடாளுமன்றத்திலேயும் குரல் கொடுக்க அரசியல் ரீதியாக போராடுகிறோம் என்று எத்தனை பேர் முன்வந்தாலும் *உண்மை கிறிஸ்தவர்களுக்கு இவ்வுலகத்தில் எதிர்ப்புகள் உண்டு*. 1யோ. 3:13, மத். 10:22.

 

அரசியல் ரீதியாக வெற்றிபெற வேண்டும் என்றிருந்தால், கிறிஸ்து ஒரு அரசியல் கட்சியை துவங்கியிருப்பார். யோ. 18:36

 

எந்த கிறிஸ்தவனும்

மாநில அரசின் சட்டத்திற்கும்,

ஒன்றிய அரசின் சட்டத்திற்கும்,

கட்டுப்பட்டு *கீழ்படிந்து நடக்கவேண்டியது அவசியம்* என்று வேதம் நம்மை வலியுறுத்துகிறது. 1பேதுரு 2:14

 

ஏனென்றால்

மாநில & ஒன்றிய அரசாங்கத்தையும், உலக இராஜ்யத்தையும் கடந்து நாம் *பரலோக இராஜ்யத்தின் பிரஜைகள்*.

எவரைக்காட்டிலும் சட்டத்திற்கு கீழ்படிதலில் நாம் முன்னுதாரணமாக இருக்கவேண்டியது கட்டாயம். அதற்கான தகுதியை நிரூபிக்க எப்போதும் கடமைப்பட்டிருக்கிறோம். பிலி. 4:5

 

உலகத்தாருடன் கைக்கோர்த்துக் கொண்டு தனது சமாதானத்தை பெற விரும்புகிறவரை தேவன் எவ்வாறு அழைக்கிறார் என்று யாக்கோபு 4:4ல் படித்துப் பாருங்கள்.. ஆச்சரியப்படுவீர்கள் !!

 

எச்சூழுநிலையிலும் முடிவு பரியந்தம் சத்தியத்தை பற்றிக்கொண்டு தேவனுக்கு உண்மையாய் நிலை நிற்கவேண்டியதே நம்முடைய அழைப்பு!!

 

கர்த்தாவே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன். சங். 143:9 

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/FW8FhKXkNJv6VhkmyK4QYg

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/IgtfyjPIzMk

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக