செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

ஏல்-ஓ-கீம்

*ஏல்--கீம்*

by : Eddy Joel Silsbee

 

சிருஷ்டிப்பின் தேவனின் நாமத்திற்கே மகிமையும் கனமும் உண்டாவதாக.

 

எபிரேய வார்த்தைகளில் தேவனுடைய தன்மையை பார்த்து வருகிறோம். இவைகள் தேவனுடைய பெயர்கள் அல்ல. அவரது தன்மையை குறிக்கும் வார்த்தைகள்.

 

இன்று பார்க்கும் வார்த்தை *ஏல்--கீம்*

ஆங்கிலத்தில் : el·ō·hēm'

 

தமிழ் அர்த்தம் : தேவன் / நீதிபரர் / சிருஷ்டிகர்

 

பழைய ஏற்பாட்டில் ஏறத்தாழ 2000க்கும் அதிகமான இடங்களில் காண முடிகிறது !!

 

மொழியாக்கம் செய்யப்பட்ட வார்த்தையாக முதன் முறையாக துவக்க வசனமாகிய ஆதியாகமம் 1:1லேயே இந்த வார்த்தை இடம் பெறுகிறது.

 

கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்பட்டதை அழைக்கும் வார்த்தையான செப்டுவஜின்ட்டில் உள்ள எலோஹிம் என்னும் கடவுளுக்கான நிலையான கிரேக்க வார்த்தை தியோஸ் என்பது.

 

"மனித விவகாரங்களில் அசாதாரணமான கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும் அல்லது அசாதாரண நன்மைகளை வழங்குவதற்கு பொறுப்பான ஒரு ஆழ்நிலை ஆதாரம்" (BDAG). இது குறிப்பாக இஸ்ரேலின் ஏகத்துவ கடவுளைக் குறிக்கிறது.

 

எலோஹிம் "கடவுள்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எலோஹிம் என்ற பெயரின் வழித்தோன்றல் பெரும்பாலான அறிஞர்களுக்கு விவாதத்திற்குரியது.

 

சிலர் இது 'êl' என்பதிலிருந்து பெறப்பட்டதாக நம்புகின்றனர், இது 'wl' என்பதிலிருந்து உருவானது என்கிறார்கள்.

 

மற்றவர்கள் எலோஹிம் என்பது மற்றொரு இரண்டு வேர்களில் இருந்து பெறப்பட்டது என்று நினைக்கிறார்கள்: 'lh (இது "கடவுள்") உடன் இணைந்து 'elôah (அதாவது "பயம்").

 

இன்னும் சிலர் 'êl மற்றும் Elohim' ஆகிய இரண்டும் 'eloah' என்பதிலிருந்து வந்ததாகக் கருதுகின்றனர்.

 

எப்படியாயினும் ஏல்-ஓ-கீம் என்பது தேவனை, நீதிபரரை, சிருஷ்டிகரை நாம் உத்தமமாய் பின்தொடர்வோம்.

 

இனிச்சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார். ஏசா. 60:19

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (Incl. Govt. Registration)

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/CRFI38hPrYd9jomqUovH4s

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/DIIZSWlgsqs

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக