*ஏல் ஓ-லாம்*
by : Eddy Joel Silsbee
என்றென்றும் ஜீவித்திருக்கும் நம் பரம பிதாவின் நாமத்திற்கே எல்லா துதியும் புகழும் உண்டாவதாக.
எபிரேய வார்த்தைகளில் தேவனுடைய தன்மையை பார்த்து வருகிறோம். இவைகள் தேவனுடைய பெயர்கள் அல்ல. அவரது தன்மையை குறிக்கும் வார்த்தைகள்.
இன்று பார்க்கும் வார்த்தை *ஏல் ஓ-லாம்*
ஆங்கிலத்தில் : el o-lawm
தமிழ் அர்த்தம் : எப்போதும் ஜீவித்திருக்கும் தேவன் / நித்தியத்தின் தேவன் / சர்வத்திற்கும் தேவன்
மொழி பெயர்த்ததால் இந்த எபிரேய வார்த்தை அப்படியே தமிழ் வேதாகமத்தில் காண முடியவதில்லை.
முதல் முறையாக இவ்வார்த்தை ஆதி. 21:33ல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தம் 3 முறை எபிரேய பழைய ஏற்பாட்டில் காணலாம். ஏசா. 26:4, எரே. 10:10
ஏல் என்பது "கடவுள்" என்று மொழிபெயர்க்கப்பட்ட மற்றொரு பெயராகும். மேலும் கடவுளின் குணாதிசயத்தின் பல்வேறு அம்சங்களைக் குறிப்பிடுவதற்கு வேறு வார்த்தைகளுடன் இணைந்து பயன்படுத்தலாம்.
ஓலாம் என்பது 'எல்எம்' என்ற வேர்ச்சொல்லில் இருந்து உருவானது (இதன் பொருள் "நித்தியம்"). ஓலாம் என்பது "என்றென்றும்", "நித்தியம்" அல்லது "நித்தியமானது" என்று பொருள்படும்.
ஏல் + ஓலாம் என்ற இரண்டு வார்த்தைகளும் இணைந்தால், "நித்திய கடவுள்" என்று மொழிபெயர்க்கலாம்.
கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார். ஏசா 26:4
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (Incl. Govt. Registration)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/CRFI38hPrYd9jomqUovH4s
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக