*ஜெபம் கேட்கப்பட என்ன தடை?*
by : Eddy Joel Silsbee
தான் ஒரு குற்றமும் செய்யாதிருந்தும் சிலுவையை சுமக்க செய்த போது ஜனங்கள் மீது பொறுமையாயிருந்த இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்..
ஜெபிக்க ஆரம்பிப்பதற்கு முன்னரே –
மற்றவர்களுக்கு எதிராக *நாம்* செய்த தவறுக்காக *அவர்களிடத்தில்* ஒப்புரவாக வேண்டுமாம்.. (மத். 5:24)
ஒருவேளை, அவர்கள்
*நமக்கெதிராய் தவறு செய்திருந்தால்*...?
அப்போதும் –
ஜெபிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர்
– *நாம் தான்* போய் சரி செய்ய முயற்சிக்க வேண்டுமாம் !! (மத். 18:15-17)
நம் ஜெபம் பரலோக தேவனிடத்தில் கேட்கப்பட வேண்டுமெனில், இந்த வரைமுறையை நமது ஞாபகத்தில் இருக்கவேண்டியவை !!
*எவருடைய ஜெபம் கேட்கப்படவேண்டுமோ, அவரே முதலில் தன்னை ஒப்புரவாக்கிக்கொள்ள வேண்டும்* !
மனிதனோடு முரண்டு பிடித்துக்கொண்டு,
இருதயத்தில் கசப்பை சுமந்துக்கொண்டிருந்தால்,
*பரிசுத்த* ஆவியானவர் அந்த இருளான இருதயத்தில் வாசமாயிருப்பதற்கு இடமில்லையே !!
கோபமும், சண்டையும், எரிச்சலும், முகம் சுளிப்பதும், விரோதம் பாராட்டுவதும் கிறிஸ்தவமே அல்ல. கலா. 5:20
தாழ்ந்துபோவதும்,
விட்டுக்கொடுப்பதும்,
பொறுத்துக்கொள்வதும்,
அமைதலாயிருப்பதுமே கிறிஸ்தவர்களின் தலையாய பண்பு. கலா. 5:22-23
ஒருவர் நம்மைக் காணும் போது,
நம்மையல்ல சிலுவை பரியந்தமும் தம்மை தாழ்த்தின இயேசு கிறிஸ்துவையே மற்றவர்கள் காணவேண்டும். கலா. 3:27, பிலி. 2:8
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/l1csy9Dl8SE
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/FyJsZJsPe3C3bfhvEp3IOO
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக