*முறையை மாற்றினால் இலக்கு தவறும்*
by : Eddy Joel Silsbee
வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் படைத்த கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
(1) விசுவாசித்து,
(2) இரட்சிக்கப்பட்டு (!)
(3) ஞானஸ்நானம் எடுத்தவர்கள் அநேகர்.
இரட்சிக்கப்பட்டு வருஷங்கள் கடந்துவிட்டது ஆனால்
ஞானஸ்நானத்தை குறித்து ஆண்டவர் இன்னமும் வெளிப்படுத்தாததால் காத்திருப்பதாக பலர் பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள்.
வேதமோ அவ்வாறு சொல்லவில்லை:
(1) விசுவாசித்து
(2) ஞானஸ்நானம் பெற்றவர்கள் தான்
(3) இரட்சிக்கப்படுகிறார்கள் என்று எழுதியிருக்கிறது !! (மாற்கு 16:16)
உபயோகிக்க வேண்டிய முறையை,
கொடுக்கப்பட்ட செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு புத்தகத்தை (Operations & Maintenance Book) *வாசித்து அதன்படியே உபயோகிக்கும் போது தான்* பெற்ற பொருளை முறையாக பத்திரப்படுத்தமுடியும்.
அதுபோல,
இரட்சிப்பின் படியில் / விசுவாசத்தில் சொல்லப்படுவதில்
*எது ஒரிஜினல் எது டூப்ளிகேட் என்று துல்லியமாய் கண்டுபிடிக்க*,
தங்கள் கையில் உள்ள கையேட்டை (வேதத்தை) ஒப்பிட்டு பார்க்கவும்.
அப். 2:38ல் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டவர்களே, கீழே 47ம் வசனத்தில் இரட்சிக்கப்பட்டவர்கள் என்று வேதம் அழைப்பதை கவனிக்க தவறிவிடக்கூடாது.
விசுவாசித்தால், வாயினால் அறிக்கையிட்டால் இரட்சிக்கப்படுவாய் என்று ரோமர் 10:9-10ஐ தனியாக வாசித்து இரட்சிப்பின் பாதையை தவறாக புரிந்துக்கொள்ளவேண்டாம்… நியாயபிரமாணமா விசுவாசப்பிரமாணமா என்ற கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார் பவுல் !! மேலேயுள்ள 5, 6ம் வசனங்களை கவனித்துப்பாருங்கள்…. தொடர்ந்து வாசிக்கும் வேத வசனத்தைக் காதால் கேட்கும் போது விசுவாசம் வருவதையும் 17ம் வசனத்தில் குறிப்பிடுகிறார்.
ஆகவே, விசுவாசமுள்ளவன் ஞானஸ்நானம் பெறும் போது இரட்சிக்கப்படுகிறான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்படிவது அவசியம். மத். 28:18-20
அவர் வார்த்தை நம்மில் இருந்தால், நமது ஜெபம் கேட்கப்படும். யோ. 15:7
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/pxDduRPDhBc
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/FyJsZJsPe3C3bfhvEp3IOO
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக