புதன், 5 ஜனவரி, 2022

டிமான்ட் அல்ல வேண்டுதலே ஜெபம்!

*டிமான்ட் அல்ல வேண்டுதலே ஜெபம்!*

by : Eddy Joel Silsbee

 

உன்னதங்களில் வாசம் செய்யும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

வர வேண்டிய ஆசீர்வாதம் அல்லது விடுதலையானது தீர்க்கதரிசனமாக உத்திரவாதமளிக்கப்பட்டிருந்த காலம் நிறைவேறுவது நெருங்கிவிட்டது என்று கணக்கிட்டு அறிந்த பிற்பாடும், தானியேல் தேவனிடத்தில் *தனது மீறுதலுக்காக மன்னிப்பு கோரினார்*. தானி. 9:2-10

 

ஜெபிக்கும் போது எப்போதும் தேவனிடத்தில் *நம்மை தாழ்த்த வேண்டியது அவசியம்*.

 

தேவனுக்கே கற்றுக் கொடுப்பது போல,

ஜெபத்தில் பிரசங்கம் செய்யக் கூடாது.

 

ஏற்றத்தாழ்வோடு குரலை ஜோடித்து,

வசனங்களை அடுக்கி,

'ஓ'வென்று கத்தி கூப்பாடு போட்டு, (1இரா.18:27)

உரத்த சப்தத்தில் ஜெபிக்கவேண்டிய அவசியமில்லை. (பிர. 5:2; மத். 6:7)

 

எவ்வளவு சப்தம் போட்டாலும் வானத்திற்கு உங்களது குரலை சேர்க்க முடியாது !!

 

நம்மை உண்டாக்கினவர் அவர். சங். 95:6

நாம் மண் என்பது அவருக்கு தெரியும். சங். 103:14

 

அடக்கத்துடன் அமைதலுடனும்,

தேவாதி தேவனிடத்தில் நிற்கிறோம் என்பதை உணர்ந்து பயபக்தியோடு அவரிடம் நாம் *வேண்டுவது* அவசியம்.

 

*டிமான்ட் அல்ல வேண்டுகிறோம் அல்லது கெஞ்சுகிறோம்* என்பதை நினைவில் கொள்ளவும் !!

 

ஜெபம் என்றால் வேண்டுதல் !!

 

அவசியத்தை தெரியப்படுத்த ஒரு கடமைக்காக வேகம் வேகமாக ஜெபித்து விட்டு ஓடி விட கூடாது.

 

விண்ணப்பங்களின் பலனை பெற்றுக்கொள்ள துதியும், ஸ்தோத்திரங்களும் சேர்ந்து சமர்பிக்க வேண்டும் (பிலி. 4:6)

 

தாழ்மையுடன், வேண்டுதலுடன், கீழ்படிதலுடன் ஏறெடுக்கும் ஜெபம் அவருடைய கிருபையை பெற்றுத்தரும். எஸ்றா 10:1, யாக். 4:8; 4:10; 5:16; 1யோ. 3:22; 5:14-15

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/9xuYtzSJAF0

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/FyJsZJsPe3C3bfhvEp3IOO

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக