#1123 - *பாவ நிவாரணத்திற்கு இரத்தம் சிந்தவேண்டியது அவசியமாயிருக்க இங்கே “மாவு” எதற்கு தேவன் கொண்டு வர சொன்னார் கொஞ்சம் விளக்குங்கள் brother?* லேவி. 5:11 இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; அது பாவநிவாரண பலியாயிருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலுமிருந்து
*பதில்* பாவநிவாரணத்திற்கு இரத்தம் சிந்தப்படவேண்டியது அவசியம் என்பதை எப்போதும் நம் நினைவில் வைத்திருப்பதால் இந்த கேள்வி எழும்புவது சரியானதே. லேவி. 17:11
பழைய ஏற்பாட்டின் நியமனப்படி (நியாயபிரமாண நியமனப்படியாக) எவன் ஒருவன் பாவம் செய்திருந்தாலும் அவனுக்கு பாவநிவாரணமாக பலிகளை தேவன் நியமித்திருந்தார். அவைகளை பாவஞ்செய்த ஒருவன் ஆசாரியனிடத்தில் கொண்டுவந்து தனது பாவத்திற்காக ஏறெடுக்கும் பொழுது பாவமன்னிப்பை பெறுகிறான் என்று மோசேயின் பிரமாணத்தின் வழியாய் அறிகிறோம்.
கீழ்வரும் வசனத்தைக் கூர்ந்து கவனிக்கவும் :
1- லேவி. 5:6 தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரணபலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
2- லேவி. 5:7 ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர *அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால்*, அவன் செய்த குற்றத்தினிமித்தம் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரணபலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும், கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.
3- லேவி. 5:11 இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர *அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால்*, பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; ..
பத்தில் ஒரு பங்கு எப்பா அளவு என்பது சுமார் ஏறக்குறைய ஒன்னரைக் கிலோ.. அதாவது ஒரு நபர் ஒரு நாளில் உண்ணக்கூடிய உணவின் அளவு அது. (யாத். 16:33, 36)
கவனிக்கவேண்டியவை : தனது பாவநிவாரணத்திற்கான பலியாக கொண்டு வரப்படும் பொருள் தனது சக்தியின் அடிப்படையில் மாறியதேயன்றி; தான் செய்த பாவத்தின் அடிப்படையில் பலிகள் வேறுபடவில்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும்.
தேவனுக்கு விரோதமாய் செய்யப்பட்ட எவ்வித பாவமும் தேவனிடமிருந்து மனிதனை பிரித்தது என்ற ஒரே தன்மை அல்லது ஒரே விளைவையே ஏற்படுத்தியது என்ற உண்மையை இது வலியுறுத்துகிறது.
ஏழையோ பணக்காரனோ; தனது பாவத்தை உணர்ந்த அனைத்து தரப்பினருக்கும் பாவமன்னிப்பு கிடைக்க வேண்டும் என்று கடவுள் விரும்புவதால் அவரவரது பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு மேற்கூறிய மூன்று வகை பலியை நாம் காண்கிறோம்.
உங்களது கேள்விக்கு விடையை நாம் எபிரேயர் எழுத்தாளனிடமிருந்து கவனிக்க முடிகிறது.
எபி. 9:22 நியாயப்பிரமாணத்தின்படி *கொஞ்சங்குறைய* எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
*கொஞ்சங்குறைய என்ற வார்த்தையை கவனிக்கவும்* !!
பாவநிவாரணத்திற்கு இரத்தம் சிந்துதல் அவசியம் என்பது பொதுவாக உண்மையாக இருந்தாலும், சில சிறிய விதிவிலக்குகள் இருந்தன. உதாரணமாக, பாவநிவாரணம் அல்லது சுத்திகரிப்பு விஷயத்தில், சிலது நெருப்பினாலும் சிலது தண்ணீரினாலும் சுத்தப்படுத்தப்பட்டன என்பதை எண். 31:22-24; லேவி. 16:26,28 நமக்கு கற்றுக்கொடுக்கிறது.
தேவன் ஒரு சில விதிவிலக்குகளைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் (எண். 16:46) அவை தேவனது பொதுவான விதியை மாற்றவில்லை என்பதை நாம் அறிகிறோம். (லேவி. 17:11).
*குறிப்பு*: இரத்தபலி செலுத்தும் அளவிற்கு கையில் காசு இல்லாமல் பாவமன்னிப்பைப் பெற வாய்ப்பின்றி எவரும் நரகம் போய்விடக்கூடாதென்று; அனுதினமும் உட்கொள்ளும் மாவையாவது கொண்டுவந்து இரட்சிப்படைய வேண்டும் என்று தேவன் தன் ஜனம் மீது அளவற்று பிரியப்பட்டார். அப்பேற்பட்ட அன்பின் நிமித்தமே, தனது சொந்த குமாரனையே சிலுவையில் ஒரே ஜீவாதார பலியாக்கி, மிருக இரத்தமோ, சாப்பிடும் மாவையோ கொண்டுவந்து சிரமப்பட அவசியமில்லாத இந்த புதிய ஏற்பாட்டு காலங்களில் இலவசமாக; வசனத்தைக் கேட்டு, இருதயத்தில் விசுவாசித்து, மனந்திரும்பி, தண்ணீரில் மூழ்கி *ஞானஸ்நானம் எடுத்துக்கொண்ட பின்பு* இரட்சிக்கப்படுவாய் என்றும், அதினிமித்தம் தேவன் நமது பாவங்களை மன்னிக்கிறார் என்ற உன்னதமான ஏற்பாட்டைக் கூட ஏற்க மனமில்லாத ஜனங்கள் இன்னமும் தங்களை கிறிஸ்தவர் என்று பொய்யான வாழ்க்கை வாழ்வது எவ்வளவு கொடிதான முடிவிற்கு தங்களது ஆத்துமாவின் பயணம் செல்கிறதென்பதை அறியாமல் இருக்கிறார்கள்!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
----*----*----*----*----*-----

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக