செவ்வாய், 4 ஜனவரி, 2022

ஊழியர்களுக்காய் ஜெபிப்பது அவசியம்

*ஊழியர்களுக்காய் ஜெபிப்பது அவசியம்*

by : Eddy Joel Silsbee

 

பூரண சகாயராகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

இயேசு இவ்வுலகில் குழந்தையாய் வந்ததுமே அவரைக் கொலை செய்ய பிசாசு முயற்சித்தான். மத். 2:13-16

 

ஊழியத்திற்கு தயாராகும் போது எப்படியாவது வீழ்த்திவிடலாம் என்று மூன்று முறை முயன்று பார்த்தான். மத். 3:16 - 4:11

 

ஊழியத்தையாவது எப்படியும் தடுத்து விடலாம் என்று அநுதினமும் அநேகரைக் கொண்டு நெருக்கடி கொடுத்தான். மத். 22:15, லூக். 20:20

 

பிதாவின் சித்தம் நிறைவேறிவிடக்கூடாதென்று; இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கும் வேளையில் கூட “நீ உண்மையாகவே தேவனுடைய  குமாரன் என்றால் சிலுவையை விட்டு இறங்கி நிரூபிக்க முடியுமா?” என்று சவால் விடுத்தான் பிசாசு. மத். 27:40, 26:39, மாற்கு 14:36

 

பச்சை மரமாக இருக்கும் இயேசு கிறிஸ்துவையே இந்த அளவிற்கு சோதித்து முயற்சித்தவன் பட்ட மரமாகிய நம்மை சும்மா விட்டு விடுவானோ? லூக். 23:31

 

ஒரு ஆத்துமா அல்லது ஒரு விசுவாசி விசுவாசத்தை விட்டு விழுந்தால் – சாத்தானுக்கு அது ஒரே ஒரு (1) எண்ணிக்கை தான் !

ஆனால் ஒரு ஊழியன் விழுந்தால்? அது பல எண்ணிக்கைக்கு சமம் !

 

ஆகவே, விசுவாசிகளை விட உத்தமமாக சத்தியத்தின்படி தேவனுக்கு ஊழியம் செய்யும் ஊழியர்களுக்கு அதிகமான நெருக்கடிகள் உண்டு. 2கொரி. 1:4, 2தீமோ. 3:12, 1தெச. 3:3-4, 1பேதுரு 5:9-10; வெளி. 1:9-10, 7:14, 12:4, 7-10.

 

உங்களுக்காக எப்போதும் ஊழியக்காரர்களாகிய நாங்கள் ஜெபிக்கிறோம்... ஆனால் ஊழியர்களுக்காக இடைவெளியில் நிற்பது யார்?

 

தன் பிரச்சனையை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் தனது கண்ணீரை தேவனிடத்தில் மாத்திரமே அந்தரங்கத்தில் ஊற்றுவர்களுக்காக சபையார் எப்போதும் ஜெபிக்கவேண்டும்.

 

தங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்று அப்போஸ்தலர்கள் சபையாரிடம் கூறினர் (2தெச. 3:2, ரோ. 15:31-32, 1கொரி. 15:32)

 

உங்களது ஜெபமே எங்களது ஆரோக்கியமும் ஜெயமும்.

 

நம் அனைவருக்கும் தேவன் தாமே சகல பலனும் தந்து ஜெயமாய் ஆசீர்வதிப்பாராக.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/d038NqDlfDA

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/FyJsZJsPe3C3bfhvEp3IOO

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக