திங்கள், 27 டிசம்பர், 2021

மேலே ஏறும் ஏணியின் முதல் படியே கீழ்படி

*மேலே ஏறும் ஏணியின் முதல் படியே கீழ்படி*

by : Eddy Joel Silsbee

 

நேற்றும் இன்றும் என்றும் மாறா நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

கிறிஸ்துவை நோக்கி மனம் மாறியதும்,

யோவானிடம் அரசாங்க ஊழியர்களான ராணுவ போர் சேவகர்கள் கேட்ட கேள்வி *இனி நாங்கள் எப்படி நடக்க வேண்டுமென்று*? லூக். 3:14

 

ஒழுக்கத்திற்கும், கடமையை செய்வதற்கும் ஆணித்தரமாக பயிற்றுவிக்கப்பட்ட ராணுவ வீரர்களே கிறிஸ்துவின் அருகில் வரும்போது *இன்னும் தாங்கள் சீர் செய்யப்படவேண்டியுள்ளது”* என்று உணர்த்தப்பட்டனர்.

 

நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண் செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்று யோவான் ஸ்நானன் ஆலோசனை கூறினார். லூக். 3:14

 

மனம்திரும்புதலுக்காக அவர்கள் பெற்றுக் கொண்டதைக் காட்டிலும்,

*பாவ மன்னிப்பிற்காக* நாம் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட சூழ்நிலையில், *நம்மில் எப்படிபட்ட மாற்றங்கள் வந்திருக்கிறது*?

 

வசனத்தைச் சொன்னால் :

- சலிப்பு வருகிறது,

- பாரம்பரியம் முன்னுரிமை எடுக்கிறது,

- செய்வது தவறு என்றறிந்தாலும், பல காரணங்களை கூறி தவிர்ப்பது,

- வேதத்தில் சொல்லப்படாததை ஆராதனையில் புகுத்துவது,

- வேதத்தில் சொல்லப்படாத ஆண்கள் பெண்கள் என்று தனித்தனியே பிரித்து ஆலோசனைக்கூட்டம் என்ற பெயரில் குடும்பத்திற்குள்  சமாதான குலைச்சலுக்கு வித்திட்டது போன்ற பல களைகளை, கூடவே வைத்துக்கொண்டு, *“சமாதானத்தைத் தாரும், தாரும்”* என்று ஊர் உலகத்திற்காக ஏறெடுக்கும் கதறலை களைந்து, உண்மையாக வசனத்திற்கு கீழ்படிந்து தேவனுக்கு முன்பாக தாழ்மைப்படும்போது, நிச்சயம் நமக்கு இரங்குவார்.

 

*முதலாவது வசனத்திற்கு கீழ்படிய வேண்டும்*.

 

நமக்கு கட்டளை கொடுத்தது :

- பரலோக தேவன்,

- சகல வல்லமையுள்ள கடவுள்,

- உன்னதமானவர்,

- இராஜாதி ராஜா,

- கர்த்தர்

என்று சொல்லி முடியாத மாட்சிமை உள்ளவர்.

அவர் வாக்குக்கு நாம் செவி கொடுக்கத் தாமதிக்கவேண்டாம்.

 

தேவன் நமக்கு கீழ்படிதலின் இருதயத்தை தருவாராக.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

கிறிஸ்தவ திருமணப் பதிவாளர்,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/3WQHHvPWUCM

 

*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :

https://chat.whatsapp.com/JPiQF3ZnKZK70lUgamZ0dL

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக