#1119 - *ஷாத்ராக் மேஷாக் ஆபேத்நெகோவாகிய மூவரையும் தன் சிலையை வணங்கும்படி நேபுகாத்நேச்சார் கட்டாயப்படுத்தி நெருப்பு சூளையில் போடும் தருணங்களில் தானியேல் எங்கிருந்தார்*? 
*பதில்* : இதற்கான எந்த ஆதாரமும் வேதத்தில் காணமுடியவில்லை. ஆகவே இதற்கான எந்த ஒரு பதிலும் எவ்வளவு தர்க்கரீதியாக அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்கதாகத் தோன்றினாலும், அது ஒரு யூகம் மாத்தரமே. 
ஒரு வேளை நமது யூகத்திற்காக நீங்கள் ஒரு பதிலை என்னிடமிருந்த எதிர்பார்ப்பதாகயிருந்தால்; கீழ்கண்டவற்றை சாதகமாக எண்ண முடியும். 
60முழ உயரமும் 6அடி அகலத்திலும் செய்யப்பட்ட தனது பொற்சிலையை வணங்கும்படி நேபுகாத்நேச்சார் இராஜா வற்புறுத்தும் சம்பவத்தை தானியேல் 3ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம்.
1-இராஜாவின் பார்வையில் தானியேல் முக்கிய பதவி வகித்ததால், ஒருவேளை அவர்மீது குற்றஞ்சாட்டுவதற்கு மற்ற அதிகாரிகள் பயந்திருக்கலாம்.  தானியேல் இராஜாவின் கொலுமண்டபத்தில் இருந்ததை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். தானி. 2:49
மேலும் 2ம் அதிகாரம் 48ம் வசனம் சொல்வதை கவனியுங்கள்… “பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனைப் பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின் மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்”. தானி. 2:48
2- அல்லது இராஜாவின் வேலைக்காக தானியேல் வெளியூர் சென்றிருக்கலாம். 
3- இந்த பொற்சிலையானது பாபிலோனுக்கு தென்கிழக்கே சுமார் 95 மைல் தொலைவில் உள்ளஒரு நகரின் பகுதியில் இருந்ததாகக் கருதப்படும் துரா சமவெளியில் நிறுவப்பட்டிருந்தது. (தானி. 3:1) ஆகவே, தானியேல் பாபிலோன் மாகாணத்தின் ஆட்சியாளராக இருந்ததால் தனது அலுவலகத்தின் கடமைகள் காரணமாக நிகழ்வில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். தானி. 2:48
4- அல்லது தானியேல் மீதும் அவருடைய கடவுள் மீதும் நேபுகாத்நேச்சார் கொண்டிருந்த மிகுந்த மரியாதையின் காரணமாக, நேபுகாத்நேச்சார் தானியலை நிகழ்வில் கலந்துகொள்ளவிடாமல் தவிர்த்திருக்கலாம். தானி. 2:47
தானியேல் ஏன் அந்த சம்பவத்தில் இடம்பெறவில்லை என்று குறிப்பாக சொல்லாததால், மேலே நான் குறிப்பிட்ட நான்கு குறிப்புகளுமே எனது அநுமானமே. 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் : 
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
வியாழன், 9 டிசம்பர், 2021
#1119 - ஷாத்ராக் மேஷாக் ஆபேத்நெகோவாகிய மூவரையும் தன் சிலையை வணங்கும்படி நேபுகாத்நேச்சார் கட்டாயப்படுத்தி நெருப்பு சூளையில் போடும் தருணங்களில் தானியேல் எங்கிருந்தார்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக