*சகலமும் நன்மைக்காக*
By : Eddy Joel Silsbee
சகல நன்மையினாலும் கிருபையினாலும் நம்மை நடத்துகிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
அருகாமையில் நின்றவர்கள் துப்பாக்கி வெடித்து பலியானதை பார்த்த போதும், கடந்து போன வாகனத்திலிருந்து மயிரிழையில் தப்பினவர்களும், இரவில் மாறி மாறி விழுந்த இடியை அனுபவித்தவர்களுக்கும், கடன்பாரங்களின் மத்தியில் வேலை பறிபோகும் நிலையை மாறினதை அநுபவித்தவர்களுக்கும் ”*ஆபத்து நேரத்தில் அடைக்கலம்*” என்கிற வார்த்தைக்கு சரியான அர்த்தம் புரியும்.
உடலின் நடுக்கமும், வேக வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இரத்தத்தை நாமே உணரும் வேளையில்;
மறைந்துக் கொள்ள ஒரு பாதுகாப்பான இடமோ,
முதிர்ந்த ஒருவரது அணைப்போ ஆறுதலைத் தரும்.
இராஜாவாக இருந்த போதும், ஏராளமான படைகள் இருந்த போதும் தாவீது இராஜா, தேவனை தன் அடைக்கலம், அரண் என்றிருந்தார்.
தன் காலமுழுதும் போர் புரிந்தாலும் *கர்த்தரை மாத்திரமே சார்ந்து இருந்ததன் பலனாலேயே* வெற்றி கிடைத்தது.
நம்முடைய சகல சூழ்நிலைகளிலும்,
சகல நேரங்களிலும்,
தேவனே நமக்கு அடைக்கலமும்,
பெலனும்,
ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.
ஆகவே, பூமியே தன்னிலை மாறினாலும்,
நடுச்சமுத்திரத்தில் ஏதுமின்றி தத்தளித்துக்கொண்டிருக்கும் போது கண்ணில் கிடைத்த ஒரு குன்றில் தஞ்சம் புகுந்து சாவதானமாய் இருந்த போது அந்த மலையும் சாய்ந்துபோனாலும்,
நிற்ககூடமுடியாமல் நம்மை சுற்றி ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கினாலும்,
நின்று கொண்டிருக்கும் தளம் அதிர்ந்து அசைந்தாலும், சர்வ வல்ல தேவனை நாம் அண்டியிருக்கிறோம் என்பதால் அச்சம் வேண்டாம்.. சங் 46:1-3
சகலமும் நன்மைக்கே !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி (USA),
தொடர்பு : +91 81 44 77 6229
இப்பதிவின் YouTube லிங்க்:
https://youtu.be/XDUpFQ0_3J8
*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17
எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக