செவ்வாய், 16 நவம்பர், 2021

இரகசிய கிறிஸ்தவர் என்ற அறியாமை

*இரகசிய கிறிஸ்தவர் என்ற அறியாமை*

By : Eddy Joel Silsbee

 

நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

 

இரகசியமாக கதவுகளை அடைத்து கொண்டு யாருக்கும் தெரியாமல் ஜெபிக்கலாம்.

 

இரகசியமாக வேதமும் வாசிக்கலாம்.

இவைகளில் எந்த தடையும் இல்லை… வேதாகமத்திலும் அதற்கான உதாரணங்களை நாம் பார்க்க முடிகிறது.

 

சமீப காலமாக நம் காதுகளில்,

தான் *இரகசிய கிறிஸ்தவன்(ள்)* என்று சொல்பவர்கள் அதிகமாகப் பெருகிவருவதை கேட்கமுடிகிறது.

 

தன் பதவிக்காக, தன் குடும்பத்திற்காக, சமுதாய சூழ்நிலைக்காக, தனது கொள்கைக்காக, தான் *கிறிஸ்தவன் என்று வெளியே சொல்ல அச்சப்படும்* நபர்களை வேதம் எப்படி பார்க்கிறது?

 

மத்தேயு 10ம் அதிகாரம் 32-33வசனங்களில் ”மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். *மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்*” என்றார் இயேசு கிறிஸ்து.

 

கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கிறவனது இரட்சிப்பின் துவக்கமே, கிறிஸ்துவை, தேவனுடைய குமாரன் என்று *மற்றவர்கள் கேட்க* அறிக்கை பண்ணுவதே !! (அப். 8:37)

 

கிறிஸ்துவை ஏற்றுகொண்டவன், மற்றவர்களுக்கும் அந்த *இரட்சிப்பை சொல்ல* கடமைப்பட்டு இருக்கிறான் (மத். 28:18-19)

 

எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். 2கொரி. 4:3

 

ஆகவே,

*இரகசிய கிறிஸ்தவன்(ள்)* என்று சொல்பவர்கள் தங்களது அச்சத்தையும் உலக மாயையையும் விட்டு ”*கிறிஸ்துவின் வல்லமை தன்னை வழிநடத்தும்*” என்பதையும், அவரே இரட்சகர் என்றும் உணர்ந்து தடைகளை உடைத்து வெளியரங்கமாய் உண்மையான கிறிஸ்தவனாக வரவேண்டும்.

 

போதுமான விசுவாசத்தை தேவன் தாமே அனைவருக்கும் அளிப்பாராக.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி (USA),

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/Tii1YzK6mDA

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக