ஞாயிறு, 14 நவம்பர், 2021

நகையின் நகைப்பு

*நகையின் நகைப்பு*

By : Eddy Joel Silsbee

 

உன்னதங்களில் வாசம் செய்யும் நம் பரம பிதா இன்னும் நம்மை பரிசுத்தப்படுத்துவாராக.

 

உலகத்திலும் அதில் உள்ளவைகளிலும் அன்புக்கூறாதிருங்கள் என்று கிறிஸ்து சொன்னார் (1யோ. 2:15)

 

வாழ்க்கையை நடத்திச் செல்ல பணம் அவசியம்.

குடும்பத்தின் அவசர தேவைக்கு சேமிப்பு அவசியம் (நீதி. 21:5,20)

 

பண ஆசை அதாவது, தேவைக்கு மேல் அதீதமாக செயல்பட்டு; வேதாகமம் படிக்கவும்,

சபைக்கு போகவும்,

ஜெபிக்கவும் நேரமில்லாமல் இருப்பது,

அத்தியாவசியத்திற்கு கூட மற்றவர்களுக்கு உதவாமல் கையை மடக்கிப் பிடிப்பது போன்ற அனைத்தும் தீமைக்கு வேர்.

 

அனைத்து தீமைகளும் தளிர் விட்டு, வளர்ந்து குடும்பத்தினுள் மரமாக வளர்ந்து விடும்.

 

வீட்டிலும், வங்கியிலும், நகையையும் பணத்தையும்  சேமித்து வைத்துக் கொண்டு;

நகை அணியக்கூடாது என்ற கொள்கையானது உள்ளார்ந்த ஆசையை வெளிப்படுத்துகிறது.

 

நகை அணிவதும் அணியாமல் விடுவதும் அவரவர் சொந்த விருப்பம். நகை அணிவதில்லையென்று சுய விருப்பத்தில் சிலர் தீர்மானித்திருப்பார்கள். அவர்களுக்கும் தேவனுக்கும் உள்ள ஒப்பந்தம் அது.

 

ஆனால், நகை போடவேக்கூடாது என்பதைக் கொள்கையாகப் பறைசாற்ற வேதம் கட்டளையிடவில்லை.

 

அதுபோலவே, அள்ளி அணிந்துக் கொண்டு தன் பெருமையை நிலைநாட்ட நிளைப்பது முற்றிலும் தவறு.. வேதம் அதை வன்மையாகக் கண்டிக்கிறது.

 

மேலோட்டமாக 1பேதுரு 3:3ஐ மேற்கோள் காட்டுபவர்கள் அவ்வசனத்தின்படி தங்கள் தலை மயிரையும் பின்னாமல் விடுவார்களா?

 

ஆகாய் 2:8ல் வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

 

ஏசா. 60:17 நான் வெண்கலத்துக்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும் வரப்பண்ணி, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரரை நீதியுள்ளவர்களுமாக்குவேன் என்கிறார்.

 

ஆசையை அதன் மீது வைக்காமல் இருக்கவேண்டுமென்பதே தேவனுடைய வார்த்தை.

 

வசனத்தின் கருப்பொருளை மறந்து வெறுமனே பொருளைப் பற்றிக்கொண்டால் வழிமாற்றம் ஏற்படும்.

 

போதுமென்ற மனம் இருந்தால் தேவன் ஆளுகை செய்வார். எபி. 13:5

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,

ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 81 44 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/dLlZaV7jWjo

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/GxTQqKPQhuuF4bDycL8S17

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக