வியாழன், 21 அக்டோபர், 2021

வானளாவிய குரல்!

*வானளாவிய குரல்!*

By : Eddy Joel Silsbee

 

பரலோகத்தில் வாசமாயிருக்கும் நம் பரம பிதா தாமே நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.

 

தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக என்றார் ஞானி. (பிர. 5:2)

 

தொண்டையை பிளிறிக்கொண்டு சப்தத்தை உயர்த்தினாலுமே ”நான்கு வீடுகள் கடந்து உங்கள் சப்தம் கேட்க வாய்ப்பில்லை.

 

ஒரு வேளை,

தெரு முனை வரைக்கும் கேட்க வேண்டும் என்றால் அதிகபட்சமாக விசில் அடிக்கலாம் !

 

அருகாமையில் நிற்கும் ஒருவரிடம் சப்தமாக பேசினாலே,

“ஏங் கத்துற” மெதுவா பேசு எனக்கு காது நன்றாக கேட்கும் என்று சொல்வர்!

 

மனதில் நினைத்துக்கொண்டே ஜெபிக்கும் ஜெபத்தையும் கேட்கக்கூடியவரே நம் இதயத்தில் வசிக்கும் ஆவியானவர். யாக். 4:5, எபே. 3:17, 1கொரி. 3:16, ரோ. 8:9

 

அவசியத்திற்கேற்ப ஒலி அளவை

ஒலி பெருக்கி பார்த்துக் கொள்ளும்.

அந்த வேலையை நாமே பார்க்க அவசியமில்லை !!

 

சப்தத்தை எவ்வளவு உயர்த்தினாலும் கதறி கூப்பாடு போட்டாலும் வானத்திற்கு எட்டாது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பிர. 5:2-3

 

உங்களோடு ஜெபத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் ஏறெடுக்கும் ஜெபம் கேட்டு புரிந்து உங்கள் ஜெபத்தை ஆமோதித்து ஆமேன் என்று சொல்லி புரிந்துக்கொள்ளும் அளவிற்கு நமது குரல் அளவு இருக்கட்டும்.

 

சாந்தமும் அமைதலுள்ள ஜெபமே போதுமானது.

1சாமு. 1:13,  ஆதி. 24:42-42, நெகே. 2:4

 

சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு முன்பு தாழ்மைப்படுவோம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/UAJXjls-fus

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/LgJ6WSm57ovGacvbUc9tow

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக