வியாழன், 9 செப்டம்பர், 2021

சவாலான சாத்தான்?

*சவாலான சாத்தான்?*
By : Eddy Joel Silsbee

வல்லமையுள்ள தேவகுமாரனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.

தேவ மனிதர்களை எப்படியாவது சிக்கவைக்க வேண்டும் என்று பிசாசு சுற்றி சுற்றி வருவான்.

மனிதர்களை விட அவன் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவன். அதிகம் அனுபவம் உள்ளவன். (வெளி. 12:9)

தேவனோடு அனுதினமும் நட்பு பாராட்டி முகமுகமாய் பேசிக்கொண்டிருந்த ஆதாமையும், அவனால் நேசிக்கப்பட்டவளைக் கொண்டே வீழ்த்தினவன். ஆதி. 3:1, 3:5-6

ஏவாளிடம் கடவுளைப்போல வாழலாம் என்று ஆசைகாட்டினவன். ஆதி. 3:5

பட்டப்படிப்பு போல 3½ வருடம் நேரடியாக உலக இரட்சகரிடமே பயின்ற 12ல் முதல் ஆளான பேதுருவையும் 12ல் கடைசி ஆளான யூதாஸையும் தன் பக்கம் இழுத்தவனுக்கு, நம்மிடம் தேவனுடைய ஆயுதமில்லையென்றால் நீங்களும் நானும் பிசாசுக்கு தூசியை போல இருப்போம். கொச்சை தமிழில் சொல்லவேண்டுமானால் நாமெல்லாம் அவனுக்கு பச்சா!! மத். 10:1-4, எபே. 6:10-11

அவனுடைய எல்லா தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் முறியடிக்க வேண்டுமானால், அவனையே உண்டாக்கிய நம்முடைய தேவனை நாம் சார்ந்திருந்தால், பிசாசை நாம் கையாண்டு ஜெயிக்கலாம் !! சங். 25:15, எபே. 6:15, யாக். 4:7

தேவனைப் பற்றியிருந்தால் பிசாசின் தந்திரங்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும். 2கொரி. 2:11

அவன் எப்படிபட்டவனாய் இருந்தால் நமக்னென்ன?

நம்மில் இருக்கும் தேவன் சர்வத்திற்கும் வல்லவர். வெளி. 1:8, ஆதி. 17:1, 49:25, 2கொரி. 6:18

சகலத்தின் மீதும் சகல அதிகாரமும் உள்ளவர். அவரை முன்னிறுத்தினால் நமக்கு எப்போதும் ஜெயம் நிச்சயம். சங். 144:10

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
 
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/EbfREwOKUHPLjwhTIDg4jQ

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
 
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtu.be/hxjQe7Jo1wU
 

*Please Subscribe & Watch* our YouTube Videos

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக