திங்கள், 6 செப்டம்பர், 2021

செயல்படுத்தப்படும் அன்பு

*செயல்படுத்தப்படும் அன்பு*

By : Eddy Joel Silsbee

 

தம்முடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகிறவர்களை ஆசீர்வதிக்கும் தேவ குமாரனின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

நேர்மையாய் வாழ்கிறேன் என்று நினைத்து கொண்டு எல்லாரிடமும் அவர்கள் செய்யும் தவறையே சதா சுட்டிக்காட்டி கொண்டிருந்தால், விரோதிகளை மாத்திரமே வாழ்நாளில் சம்பாதிப்போம் (நீதி. 17:9, 16:28)

 

நம்மைச் சுற்றி நல்ல மனிதர்கள் இருப்பதை விட (மனித) நரிகள் கூட்டம் தான் மிஞ்சி இருக்கும்.

 

மீறுதல்களை சுட்டிகாட்டுவது அவசியம் அதே வேளையில் அவர்கள் செய்யும் நன்மையான காரியங்களை பாராட்ட தவறக்கூடாது. 1பேதுரு 4:8

 

வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு யாக். 3:16

 

அன்பு *கூறவேண்டும்* என்பதற்கிணங்கி பல கிறிஸ்தவர்கள் அப்படியே கடைபிடிக்கிறார்கள் !!

 

ஆம்... அன்பு *கூறவேண்டும்* என்பதை சரியாக உணர்ந்து அன்பை *கூறிக்* கொண்டு தான் இருக்கிறார்கள்.

 

எத்தனை வேறுபாடுகள், கசப்புகள் இருந்தாலும், அன்பை கூறிக்கொண்டு இருப்பதையும் கடந்து அன்பு *செலுத்த வேண்டும்*.

 

அன்பு செலுத்தவேண்டும் என்பது இராஜாதி இராஜாவின் பிரதான இராஜரீக கட்டளை !! யாக். 2:8

 

திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.  யாக். 1:27

 

இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான். நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம். 1யோ. 5:1-2

 

தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டும்.... 1யோ. 4:21

 

பிரசங்கத்திலும் மேடைகளிலும் அன்பை கூறுவதோடு நில்லாமல் அந்த அன்பை செயல்படுத்துவோம். (1யோ. 3:18)

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/yuH8RbLI7fg

*Please Subscribe & Watch* our YouTube Videos

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக