ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

மரித்தோருக்கான ஞானஸ்நானம்?

*மரித்தோருக்கான ஞானஸ்நானம்?*

By : Eddy Joel Silsbee

 

பாவத்திலிருந்து மீட்டு நித்திய ஜீவனை கொடுக்கும் இயேசு கிறிஸ்து தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

 

மரித்தபின் உயிர்தெழுதல்  கிடையாது என்றார்கள் கொரிந்து பட்டணத்தாரில் சிலர். (1கொரி. 15:12).

 

மோசமான வாழ்க்கையை வாழ்ந்து மரித்தவரின் சரீரத்தை ஞானஸ்நானம் கொடுத்து அடக்கம் செய்தனர் சில கொரிந்து பட்டனத்தினர். அங்ஙனம் தவறியிருந்தால் மரித்தவர் சார்பாக வேறொருவர் ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டனர். 1கொரி. 15:29

 

உயிர்தெழுதல் இல்லை என்றவர்களைப் பார்த்து (1கொரி. 15:12) பவுல் கேட்ட கேள்வி “உயிர்த்தெழுதலே இல்லையென்றால் எந்த நம்பிக்கையிலே உங்கள் ஜனங்கள் மரித்தவருக்காக ஞானஸ்நானம் எடுக்கிறார்கள் என்று”? 1கொரி. 15:29

 

சிலரோ, உயிர்த்தெழுதல் நடந்து முடிந்து விட்டது என்றனர் (2தீமோ. 2:18)

 

சொந்த அப்பா அம்மா, இயேசு, இரட்சகர், பாவம், மன்னிப்பு என்று எதையுமே சுயமாய் அறியாதிருக்கும் சிறு குழந்தைக்கு கூட ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள் கிறிஸ்தவ மதத்தினர் பலர்.

 

பாவம் எது, இரட்சிப்பு என்றால் என்ன, இரட்சகர் யார் என்று சுயமாய் அறியும்படியான உணர்வற்ற எவரும் (அல்லது எதுவும்) ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ள தகுதியேயில்லை....

 

இந்த தகுதியில்லாமல் அல்லது உணர்வு இல்லாமல் கொடுக்கப்பட்ட அல்லது எடுத்துக்கொண்ட எந்த ஞானஸ்நானமும் வேதத்தின்படி செல்லாது !!

 

பரிசோதித்து சீர்படுத்திக்கொள்ளவும் !!

 

சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமாயும் செய்யப்படக்கடவது..

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/Z3RCAN10lMo

 

*Please Subscribe & Watch* our YouTube Videos

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக