சனி, 4 செப்டம்பர், 2021

எப்போது கர்த்தருடைய பந்தி?

*எப்போது கர்த்தருடைய பந்தி?*

By : Eddy Joel Silsbee

 

நன்மையான எல்லா ஈவையும் நமக்கு கொடுக்கும் தேவனே நம்மை ஆசீர்வதிப்பாராக.

 

தூரமாய் உள்ளதும் நன்கு பழகினதும் நன்மையாய் தெரியும்.

அருகில் நெருங்கி வரும் போது புதியதைக் காட்டிலும் பழகினதே நன்மையாயும் இலகுவாயும் இருப்பதாக மனம் சொல்லும்.

 

ஆன்டிராயிட் மொபைல் உபயோகிப்பவர்கள் ஆப்பிள் மொபைல் வாங்க ஆசைப்பட்டு வாங்கியதும் உபயோகப்படுத்த திணறி மீண்டும் ஆன்டிராயிடுக்கே திரும்பியவர்களை பார்த்திருப்போம்.

 

அது போலவே அனைவருக்குமானது அல்ல என்றறிந்தும் “தசம பாகம், சுய மேன்மை” போன்ற சில லாபங்களை முன்னிட்டு;

இஸ்ரவேலருக்கு மாத்திரமே கொடுக்கப்பட்டதும்,

அவர்களுக்குமே காலாவதியாகிப்போன (expired) மோசேயின் நியாயப்பிரமாணத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நினைப்பதும், கடைபிடிப்பதும், போதிப்பதும் சாபத்தை வரவழைக்கும். எரே. 31:31, ரோ. 10:4, கலா. 3:10

 

கர்த்தருடைய பந்தியில் கலந்து கொண்டாலும் கூட,

புதிய உடன்படிக்கையில் இருக்கிறோம் என்பதை அறியாமல் நியாயப்பிரமாணம் வேண்டும் என்று வாதிட்டு *கோமாவில் கிடக்கிறார்கள்*.

 

வசனங்களைப் படிக்கவும் :

 

....... அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய *புதிய உடன்படிக்கையாயிருக்கிறது*; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். 1கொரி. 11:25

 

...... இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் *நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்*. 1கொரி. 11:30

 

அர்த்தம் புரியாமல் கர்த்தருடைய பந்தியில் கலந்து கொள்கிறவர்கள் கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து பங்கெடுக்காவிட்டால், தனக்கு தண்டனை வரும்படி பங்கெடுக்கிறார்கள். 1கொரி. 11:29

 

கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவின் சரீரத்தில் ஓர் அங்கம் என்பதையும் கிறிஸ்துவே நமக்கு சகல ஆலோசனையையும் தரும் மூளை என்பதையும் அறிந்து அவரே நம்முடைய சரீரத்தின் தலை என்பதினால் வேறொருவரின் மூளைக்கு அல்ல சொந்த தலை சொல்லும் கிறிஸ்துவின் சட்டதிட்டங்களுக்கு மாத்திரம் கீழ்படிவோம்.. லூக்கா 5:39, எபே. 1:23, 5:23, கொலோ. 1:18, அப். 2:47.

 

இரட்சிக்கப்பட்டதும் பரலோக பிதாவின் குமாரனுடைய சபையாகிய கிறிஸ்துவின் செடியிலிருந்து துளிர்விட்ட கிளைகளாக நாம் வளராவிட்டால்; தோட்டக்காரர் தன் பராமரிப்பை துவங்க நேரிடும். சுய பரிசோதனைக்கு இன்றும் காலம் இருக்கிறது. யோ. 15:1-2

 

ஆகவே, *பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம்* எடுக்காதவர்கள் கர்த்தருடைய பந்தியில் கலந்துக்கொள்ளவேண்டாம். கர்த்தரின் பந்தி முக்கியமெனில் முதலில் *பாவமன்னிப்பிற்கென்று ஞானஸ்நானம் பெறுங்கள்*. ஆக்கினைக்குத் தப்பலாம்.

 

இன்று வரை பாதுகாத்து வருகிற ஆண்டவர் தாமே சீர்படுத்தி மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/B0ORoYzLDZI

*Please Subscribe & Watch* our YouTube Videos

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக