*தகப்பனின் அன்பு*
By : Eddy Joel Silsbee
சர்வ வல்லவர் நம்மை ஆசீர்வதிப்பாராக.
எப்படி ஒரு கணவன் தன் மனைவி வயிற்றில் குழந்தை உருவான நாளிலிருந்தே,
அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது,
எந்த பள்ளியில் சேர்ப்பது,
என்ன படிக்க வைப்பது,
எதையெல்லாம் சொல்லி வளர்ப்பது என்று இப்படி பல கனவுகளை தாங்கி நாட்களை எண்ணுவது போல;
நம் பிதாவாகிய தேவனும்,
நாம் எப்படி இருக்க வேண்டும் என்று பிறப்பதற்கு முன்னமே நம் மீது பிரியப்பட்டு ஒவ்வொருவரையும் வனைக்கிறார்.
எரேமியாவை பார்த்து ஆண்டவர் சொன்னது : “உன் தாயின் கர்ப்பத்தில் நீ உருவாகும் முன்னமே உன்னை தெரிந்து எடுத்து, இந்த ஜனங்களுக்கு தீர்க்கதரிசியாக ஏற்படுத்தினேன் என்று”. எரே. 1:5
நம்மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தால் அவர் இவ்வளவு ஆர்வமாய் இருப்பார் !!!
அவருடைய கட்டளைகளை நாம் ஏற்றுக்கொண்டு அவருக்கு மாத்திரம் பிரியமாய் நடந்தால், நிச்சயமாக அவர் நம்மோடு இன்னும் நெருங்கி கிரியை செய்வதை உணரமுடியும். 1யோ. 3:22
அவர் நம்மில் கிரியை செய்வதைத் தடுப்பதும் அனுமதிப்பதும் நம் கையிலேயே உள்ளது. ஏசா. 1:2,15; 59:2
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch* our YouTube Videos
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/Cyj7n7Q7CRv2GAp7jUOzDk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக