புதன், 22 செப்டம்பர், 2021

வேலையில் ஊழியன்

*வேலையில் ஊழியன்*

By : Eddy Joel Silsbee

 

நேர்த்தியான பாதையில் நம்மை வழிநடத்தும் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

வேலைக்கும் ஊழியத்திற்கும் என்ன வித்தியாசம்?

 

கிறிஸ்தவர்களுக்கு :- ஊழியம் என்றால் தேவனுடைய வேலை செய்வது.

 

ஆனால் ஊழியம் என்றால் தூய தமிழில் “வேலை” என்பது !!

 

ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவே,

ஊழியம் *கொள்ள* வராமல், ஊழியம் *செய்ய* வந்தேன் என்றார் (மத். 20:28) எப்போதும் ஊர் ஊராக அலைந்து மக்களை போய் சந்தித்தார்.

 

ஆனால் ஊழியன் என்ற வார்த்தையின் அர்த்தம் மறந்து போனதால்,  கர்த்தருடைய வேலைக்காரன் கர்த்தருடைய சபையில் முதலாளிகளாக *உட்கார்ந்து* கொள்கின்றனர் !!

 

அப்படிப்பட்ட ஊழியர் முதலாளிகளுக்கு ஊழியம் செய்யும் தொழிலாளிகளும் (அவர்களது சொந்த விசுவாசிகள்) ரசிகர்களாகி விடுகின்றனர்.

 

இறங்கி வேலை செய்யவேண்டும் என்று வேதம் கட்டளை இடுகிறது. லூக்கா 10:10, மாற்கு 16:15, மத். 22:9

 

உடலில் பெலன் இருந்தும் வேலைசெய்ய மனதில்லையென்றால் சாப்பிடவும் கூடாது என்கிறார் பவுல்.... 2 தெச. 3:7-10

 

ஊழியரையும் அவர் குடும்பத்தையும் தாங்கும் அளவிற்கு சபை வளர்ந்தோ;

அல்லது ஊழியரின் முழுமையான நேரம் சபையாருக்காக செலவிட அவசியப்படும் பட்சத்திலோ;

அல்லது ஊழியர் வேலை செய்ய சரீரம் இடம் கொடுக்காத சூழ்நிலையோ சபையே அவரை போஷிக்க வேண்டும். 1 கொரி. 9

 

ஊழியம் என்று அசட்டையாய் இருந்துவிட வேண்டாம். அது உன்னதமான வேலை !!

 

அலைந்து திரிந்து *கடந்து போய்* சுவிசேஷத்தை அறிவிப்பவர்களின் பாதம் தேய்ந்து காய்ந்து போயிருப்பதை (ஒப்பனை) தேவன் காண்கையில் அதை அழகானவைகள் என்று சான்றிதழ் தருகிறார் !! ரோ. 10:15, ஏசா. 52:7

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EW3WN8aZD9L4sZKFqbLN7M

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/m-fYChcRb2Y

 

*Please Subscribe & Watch* our YouTube Videos
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக