வியாழன், 2 செப்டம்பர், 2021

கிறிஸ்தவனுக்கு ஜோதிட சாஸ்திரங்கள்

 


*கிறிஸ்தவனுக்கு ஜோதிட சாஸ்திரங்கள்*

By : Eddy Joel Silsbee

 

அன்பின் தேவன் நம்மை சீர்படுத்தி இன்னும் மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக.

 

கலாச்சாரமும் பாரம்பரியமும் அவசியம் என்று கவனிக்காமல் பின்பற்றும்போது பலநேரங்களில் வேதாகமத்தை விட்டு நம்மை வெளியேற்றி விடும்.

 

ஜாதகமோ, அநுதின ராசி பலனோ, எண் ஜோதிடமோ, வான சாஸ்திரமோ, பெயர் சாஸ்திரமோ, வீட்டு வாஸ்து சாஸ்திரமோ வேறே எந்த பலன்களையோ நாம் பின்பற்றாமல் தேவனுடைய வார்த்தை மாத்திரமே நமக்கு போதுமானது என்று இருக்க வேண்டும்.

 

பெயரின் கூட்டுத்தொகையில் 8 வரவேண்டும் 9 வரவேண்டும் 10 வரவேண்டும் 7 வரவேண்டும் என்று ஜோதிடர்களின் ஆலோசனையை கேட்டு வழக்கமான spellingஐ மாற்றிக்கொண்டு “O” வை “a” என்றும், ஒரு 'a'க்கு பதில் இரண்டு “aa”க்களும்,  'y' க்கு பதில் “i” என்றும் இப்படி பலவேறு லாவகமான சுயயுக்திகளை கையாண்டு செழிப்பை தேடிக்கொள்ளும் ஜனங்களில், தேவ வார்த்தையை போதிப்பவர்களும் உத்தமன் என்ற பெயரில் உலாவந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

 

வீட்டு வாசலையும், கதவுகளையும், சுவர்களையும் வேறு திசைக்கு மாற்றிமைத்துக் கொண்டாலும் தேவனுடைய அநுக்கிரகம் இல்லையானால் ஒன்றும் நடக்காது. (பிர. 5:19)

 

ஜோதிட சாஸ்திரங்கள் இந்துக்களின் முறை.

 

கிறிஸ்து வேண்டும் என்று இங்கு வந்தவர்களுக்கு மீண்டும் அங்கு என்ன வேலை?

 

தேவனை மாத்திரம் நம்பாமல், தான் விட்டுவந்த பழையவைகளிலும் நம்பிக்கை வைப்பவனின் வாழ்க்கை பெரிய ஆபத்தில் முடியும். 2பேதுரு 2:20

 

இவ்வாறு ஊரை ஏமாற்றிக்கொண்டு ஜோதிட சாஸ்திரங்களின் பின் செல்வோர் - செழிப்பை அல்ல தேவனுடைய கோபத்திற்கே ஆளாகிறார்கள்.

 

... அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம்(வ9) ……. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன் என்கிறது உபா. 18:9-12

 

மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. (எபே. 6:12)

 

கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின்னரும் ஜோதிட சாஸ்திரங்களை பின்பற்றுபவர்கள் வானத்து நட்சத்திரங்களுக்கு தலை வணங்குகிற விக்கிரக ஆராதனைக்காரர்கள் !

 

உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள் (உபா. 4:19)

 

நாம் சர்வலோகத்தையும் படைத்து ஆளுகிற தேவாதி தேவனையே தொழுது கொள்கிறோம் !!

 

வியாதியோ துக்கமோ கஷ்டமோ துன்பமோ ஏழ்மையோ நெருக்கடிகளோ இவை அனைத்தும் மண்ணினால் உண்டான இந்த சரீரத்திற்கு தான் !!

 

ஆத்துமாவோ எப்போதும் ஜம்மென்று தேவனுக்கென்று செழிப்பாய் இருக்கும்படி நாம் தேவனுடைய வார்த்தையில் நிலைநிற்கிறோமா என்பதே அவசியம்.

 

உலக வழக்கத்திற்கு செவிசாய்க்காமல் தேவனை மாத்திரமே அண்டியிருக்கவேண்டும்.

 

மகா கிருபையுள்ள தேவன் நம்மை பாதுகாத்து ஆசீர்வதிப்பாராக !!

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/pD96e6ahw0Y

*Please Subscribe & Watch* our YouTube Videos

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக