வியாழன், 16 செப்டம்பர், 2021

உள்ளதை அங்கீகரிக்கவேண்டும்

*உள்ளதை அங்கீகரிக்கவேண்டும்*

By : Eddy Joel Silsbee

 

இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

 

மனுஷனுடைய மூளை எப்போதும் உண்மைக்கு மாறாக உல்டாவாகவே யோசிக்கும். துவக்கத்திலேயே பிசாசு அப்படியாக மாற்றி போட்டதின் விளைவு அது !

 

இயேசுவே நேரடியாக வந்த போதும், மனிதர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. கிறிஸ்து என்றால் இப்படி இல்லை,

அவர் அப்படி இல்லை என்று மறுத்து விட்டார்கள். (மத். 11:19)

 

ஆனால், அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்போ, புலம்பினார்கள் ! மத். 27:54

 

பல வேலைகளில் நாமும் இப்படி தான்.

இருப்பதை ஏற்க மறுத்து;

மனம் சொல்வதை எதிர்பார்த்து;

தற்காலத்தில் அநுபவித்துக்கொண்டிருப்பதை தொலைத்து விடுகிறோம்.

 

தற்போது இருக்கும் நன்மையை அங்கீகரித்து அதில் திருப்தியையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்தினால் மாத்திரமே அதை பல மடங்காக அதிகரித்து வருஷிக்கச்செய்வார் தேவன். மத். 25:23

 

இருக்கும் ஆசீர்வாதத்தை வேண்டாம் என்று உதாசீனபடுத்தி தூக்கி எறிந்தால் (மத். 25:18), சொற்பமாக கொடுக்கப்பட்டதையும் இழந்து விடுவோம்.

 

ஆகவே வாழ்க்கையோ, கணவனோ, மனைவியோ, எந்த நிலைமையோ, வேலையோ, வறுமையோ, வசதியோ, வியாதியோ எதையும் வெறுக்காமல், உதாசீனப்படுத்தாமல் அதற்காக நாம் தேவனை ஸ்தோத்தரித்து சந்தோஷமாய் மனரம்மியமாய் ஏற்றுக்கொள்ளும்போது தேவன் சகலத்தையும் நன்மையாக்குவார்.. 1தீமோ. 6:8, 1கொரி. 7:20, 1யோ. 3:20, யோபு 42:2, சங். 114:8

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/EW3WN8aZD9L4sZKFqbLN7M

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/6eBupmL3pDI

 

*Please Subscribe & Watch* our YouTube Videos 

 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக