By : Eddy Joel Silsbee
பரிசுத்தமுள்ள தேவ குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி.
“நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்” என்றார் இயேசு கிறிஸ்து (மத். 12:35)
உள்ளே இருப்பதை சீர்படுத்த வேண்டுமெனில் அதற்கான மருந்தை வெளியேயிருந்து உள்ளே செலுத்தப்படவேண்டும்.
கர்த்தருடைய வார்த்தையே நல்ல மருந்து. (எரே. 15:19)
கலப்படமற்ற சுத்தமான *சத்திய பாலை குடித்தால்* பார்வைக்கு தெரியாதிருக்கும் ஆத்துமா புஷ்டியாய் வளரும். 1பேதுரு 2:3
கலப்படமற்ற சுத்தமான பாலை குடித்து வளர்ந்தவர்கள் இனி அசைவ உணவை எடுக்க ஆரம்பிக்கும் போது (அதாவது வேதத்தை ஆழமாக படிக்க ஆரம்பிக்கும் போது) *நன்மையை பிரித்து பார்க்கும்* அளவிற்கு வளர்ச்சியடைகிறார்கள். எபி. 5:14
ட்ரோஃபே என்னும் கிரேக்க வார்த்தைக்கு பலமான ஆகாரம் என்பது தமிழ் அர்த்தம்.
ஆசீர்வாத செய்தியைக் கேட்டு, முழங்கால் படியிட்டு பவ்யமாய் ஜெபித்து சொந்த வேலையை பார்த்துக்கொண்டு இருந்தாலே போதும்; ஆழமாக வேதத்தை துருவி துருவி அறியத் தேவையில்லை என்று நினைப்பவர்கள் விசுவாசத்தில் பலவீனமாய் இருப்பார்கள் ! ரோ. 14:2
அசைவமோ, சைவமோ அவரவர் விருப்பம் ஆனால் பலமான ஆகாரம் என்னும் சத்தான ஆகாரம் அவசியம். (ரோ. 14:3)
தெசலோனிக்கேயருக்கு 2ம் இடத்தை அப் 17:11 ஒதுக்கியுள்ளது. 3வது இடத்தையாவது நாம் பிடிக்கலாமே... !!
மிகவும் பிற்படுத்தப்பட்ட, சவாலான, குழப்பமான, இரக்கமற்ற, தன்னிறைவு அடைந்த, சுயநலமான சமுதாயம் வளர்ந்து கொண்டு வருகிறது.
நம் பிள்ளைகள் அப்படிப்பட்ட மக்கள் மத்தியில் தான் ஊழியம் செய்ய போகிறார்கள்.
நாம் வளர்ந்த சூழலைக் காட்டிலும் அவர்கள் காலம் கொடியதாக இருக்கப்போகிறது என்பதை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருப்பதால் திறமையுள்ள தீமோத்தேயுக்களும், பலமுள்ள பவுல்களும், வைராக்கியமுள்ள பேதுருக்களும், துணிவுள்ள பிலிப்புகளும் ஸ்திரமான ஸ்தேவான்களையும் உருவாக்கும்படியான நம் கடமை தீவிரமடைந்துள்ளதை உணரவேண்டும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EW3WN8aZD9L4sZKFqbLN7M
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
https://youtu.be/UQSSo3eGNLo
*Please Subscribe & Watch* our YouTube Videos
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக