புதன், 1 செப்டம்பர், 2021

உறவு அல்ல, கீழ்படிதலே முக்கியம்

*உறவு அல்ல, கீழ்படிதலே முக்கியம்*

by : Eddy Joel Silsbee

 

தேவனுடைய நாமத்திற்கு சகல துதியும் கனமும் உண்டாவதாக..

 

சரீர உறவுகளை ஜனங்கள் மேன்மையாய் எண்ணினார்கள்.

 

*கூடியிருந்த ஜனங்கள் இயேசுவை நோக்கி*;

இதோ உம்முடைய தாயும் சகோதரரும் *காத்துக்கொண்டிருக்கிறார்கள்* என்றனர். (மத். 12:47) அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லையா என்ற ரீதியில் கேட்கப்பட்டது. மத். 12:46

 

அதற்கு கிறிஸ்துவின் உடனடி பதில் “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி *செய்கிறவன் எவனோ*, அவனே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறான் என்றார்.  மத். 12:50

 

*வேறொரு இடத்தில்* :

இப்படிபட்ட அற்புதமான ஒருவரை குழந்தையாய் சுமந்த கர்ப்பம் பாக்கியமுள்ளது என்றாள் இன்னொரு பெண். லூக்கா 11:27

 

அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, *அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே* அதிக பாக்கியவான்கள் என்றார். லூக்கா 11:28

 

*இன்னுமொரு இடத்தில்* :

பரலோகத்திலிருக்கிற என் *பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே* பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை என்றார். மத். 7:20

 

ஒரு போதும்;

எனக்கு அவரைத் தெரியும்,

இவரைத் தெரியும்,

என்னுடைய மச்சான் அவர்,

என்னுடைய மாமன் அவர்,

என்னுடைய உறவினர் அவர்,

என் அப்பா பாஸ்டர்,

என் உறவினர் டீக்கனார்,

என் நெருங்கிய சொந்தம் அந்த சபை மூப்பர்,

என் தகப்பனார் தான் பிஷப் என்ற எந்த உரிமையையும் *கிறிஸ்தவத்தில் கொண்டாட முடியாது* !!

 

ஆம், சரீர உறவுகளோ,

கிறிஸ்துவை அறிந்து இருத்தலோ,

ஓங்கி பிரசங்கிப்பதாலோ,

எந்நேரமும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் என்று சொல்வதாலோ,

பாடல்களை பாடுவதாலோ,

ஆராதனையை உற்சாகமாக நடத்துவதாலோ,

எதற்கெடுத்தாலும் அல்லேலூயா Praise the Lord என்று உச்சரிப்பதாலோ,

தேவன் நம்மை அங்கீகரித்துவிடுவதில்லை !!

அவையெல்லாம் *நம் கிரியைகள் மாத்திரமே* !!

 

அவர் எதிர்பார்ப்பதெல்லாம் :

தேவனுடைய வார்த்தைக்கு *அப்படியே கீழ்படிதல்* !!

 

சரீர பிரகாரமா உறவை அல்ல,

கிறிஸ்துவின் கட்டளைப்படி கீழ்படியும் போது,

பிதாவானவர் நம்மை கிறிஸ்துவின் சரீரத்திலே ஒரு அங்கமாகவே இணைத்து விடுகிறார். அப். 2:47

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/Os1TYy_2zn0

*Please Subscribe & Watch our YouTube Videos*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக