திங்கள், 30 ஆகஸ்ட், 2021

துக்கமும் மலரும்

*துக்கமும் மலரும்*

by : Eddy Joel Silsbee

 

*மண்னாங்கட்டி* என்ற பெயருடையவரை தமிழ் அர்த்தம் தெரியாதவர்கள் Mr.மண்னாங்கட்டி என்று சுலபமாக அழைப்பார்கள்.

 

ஆனால் *அர்த்தம் புரிந்தவர் மத்தியில்* ஒவ்வொரு முறையும் அவரை மண்னாங்கட்டி, மண்னாங்கட்டி என்று கூப்பிடும் பொழுதெல்லாம் அப்பெயருடையவரின் இதயம் எப்படியிருக்கும்?

 

அது போலவே, பிரசவத்தில் தனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்த பிள்ளை என்றதால், ப்பிள்ளைக்கு *யாபேஸ்* என்று பெயரிட்டாள் அந்த தாய்.

 

ஆம் *யாபேஸ் என்றால் தமிழில் துக்கம்* !!

 

உறவினர்களும், நண்பர்களும் அவனை *யாபேஸ், யாபேஸ்* என்று கூப்பிடும் போதெல்லாம் யபேசுக்கு, வாழ்நாளெல்லாம் எவ்வளவு அவமானமாய், வருத்தமாய் இருந்திருக்கும் !!

 

இருந்தபோதிலும், தேவன் தன்னை வீணாக படைத்திருக்கவில்லை என்பதை உணர்ந்த *Mr.துக்கம்* (Mr.யாபேஸ்) இஸ்ரவேலின் தேவனை நோக்கி கீழ்க்கண்டவாறு விண்ணப்பம் பண்ணினார்:

 

(1) தேவரீர் என்னை ஆசீர்வதித்து,

(2) என் எல்லையைப் பெரிதாக்கி,

(3) உமது கரம் என்னோடிருந்து,

(4) தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக்

(5) காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்;

அவன் வேண்டிக்கொண்டதைத் *தேவன் அருளினார்*.  1நாளா. 4:10

 

*Mr.துக்கம்* என்று எந்த ஜனங்கள் அழைத்தார்களோ, அதே ஜனம் மத்தியில் மாற்றம் ஏற்படுகிறது… ஆம், அவருடைய சகோதரரைக் காட்டிலும் *கனத்தை* பெற்றாராம். 1நாளா. 4:9

 

*நம்முடைய நிலைமை எப்படி இருந்தாலும், தேவனால் மட்டுமே அதை மாற்ற முடியும்*.

 

பெயரோ, நிலைமையோ, படிப்போ, சூழ்நிலையோ, நம்மை தீர்மானிக்காது. மாறாக, நம்முடைய விசுவாசமும், ஜெபமும், அதற்குரிய தேவ தயவுமே நம்மை உயர்த்தும்.

 

அவரவர் *தம் தம் தவறுகளை உணர்ந்து மனந்திரும்பிய பின்,* தைரியமாய் தேவனிடத்தில் முறையிடுவோம்.

 

கோணலானதை சரி செய்ய அவரால் மாத்திரமே ஆகும். (ஏசா. 45:2)

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/LDFydae8QOL2ItKGgYSYXq

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/dWWZVcW97-I

*Please Subscribe & Watch our YouTube Videos*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக