வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

சொல்வதை செய்வது அவசியம்

*சொல்வதை செய்வது அவசியம்*

by : Eddy Joel Silsbee

 

சத்தியத்தின் தேவன் தாமே மகிமைப்படுவாராக.

 

எந்த சின்ன விஷயத்திற்கும் “சத்தியமா சொல்றேன்னு” தன்னுடைய வாதத்தை *சத்தியம்* பண்ணி உறுதிப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.

 

ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபடுத்திக்கொள்வதின் விளைவினால், ஒருவர் சொல்வதை கவனிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் கவனம் போதுவதில்லை.

 

பிரசங்க நேரத்தில் கூட “கவனியுங்கள்” என்று முக்கியப்படுத்தி சொன்னால் தான் அந்தக் குறிப்பை கவனிக்கத் துவங்குகிறார்கள் !!

முழு தேவ செய்தியை  எவ்வாறு கவனிக்கிறார்களோ?

 

யார் எதை பேசினாலும் முதலாவது

கவனிக்க வேண்டும்,

புரிந்து கொள்ள வேண்டும்.

 

மேலும்,

சொல்பவரின் முதிர்ச்சியையும்,

பிரபல்யத்தையும், அவரது தலை நரையையும் கணக்கிட்டு அவர் கூற்றுகளை அப்படியே ஏற்றுக்கொள்வது ஆபத்து.

 

உண்மை தன்மையை வேதத்துடன் ஒப்பிட்டு பார்த்துக் கீழ்படிய வேண்டும்.

 

சத்தியம் செய்து தன் காரியத்தை வலியுறுத்தக் கூடாது என்று இயேசு கிறிஸ்து சொல்கிறார் (மத். 5:34).

 

என்ன விளைவுகள் வந்தாலும் உண்மையை மாத்திரமே எப்போதும் சொல்ல தீர்மானிப்போம். சொன்னதை நிறைவேற்ற தவற வேண்டாம்.

 

சொன்ன வார்த்தையை நிறைவேற்ற தவறுகிறவன் தன் ஸ்தானத்தை இழக்கிறான். யாக். 3:2

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

 

வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

 

இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :

https://youtu.be/x2R9s3EfH_4

*Please Subscribe & Watch our YouTube Videos*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக