*நசரேய வேஷம்* - தினசரி சிந்தனைக்கான வேத துளி, 2 August
by : Eddy Joel Silsbee
நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
சுமார் 20 வருடம் முன்பு நடந்த ஒரு சம்பவம். இந்தியாவின் தென்பகுதியில் ஒரு கூட்டத்தினர் என்னை தேவச் செய்தி கொடுக்க அழைத்திருந்தனர். கூட்டம் முடிந்த பின்னர் அந்த ஊழியக்காரருடன் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்த வேளையில், அவர் சபை உறுப்பினர் ஒருவர் அனைவரும் வந்தாயிற்று நீங்கள் கல்லறைக்கு வந்து ஜெபம் செய்தால் போதும் என்றார் அந்த ஊழியரிடம்.
உடனே அவர்,
ஆசாரியர்கள் யாரும் பிரேதம் அருகில் போகக்கூடாதென்று வேதம் சொல்லியிருப்பதால் அங்கு வருவதில்லை என்று மறுத்து அனுப்ப, அந்த ஊழியருக்கு வேதாகமத்தின்படி விளக்கம் அளிக்கநேர்ந்தது.
கல்லறைக்கு போய் ஜெபிக்கவேண்டுமா கூடாதா என்பது வேறு. ஆனால், ஆசாரியர்கள் கல்லறைக்குப் போகக்கூடாதென்று சொல்லி தங்களை பெருமைப்படுத்திக்கொள்வதையே நாம் கவனிக்கிறோம்.
*எங்கே இவர்கள் இதை படித்தார்கள்*?
நசரேய விரதம் உள்ளவர்கள் சொந்த தாயோ தகப்பனோ இறந்தால் கூட பக்கத்தில் போகக் கூடாது. திராட்சை ரசமோ பழமோ அதன் கொட்டையோ எதுவுமே வாயினுள் போகக்கூடாது, தலை/தாடி முடி வெட்டிக்கொள்ளக்கூடாது (எண். 6:1-12). இந்த வசனத்தை முன்னிட்டு இவர்கள் இப்படி தங்களை பெருமைப்படுத்திக் கொள்கிறார்கள் !!
இந்த உலகத்தில் இயேசு கிறிஸ்துவோ வாழ்ந்த போது பிணத்தின் அருகே சென்று அவர்களை உயிரோடே எழுப்பினார். திராட்சை ரசம் பருகினார். ஆனால் நசரேய விரதம் இருக்கவில்லை. நாசரேத்தூரிலிருந்து வந்ததாலேயே அவர் நசரேயன் என்றழைக்கப்பட்டார் (மத். 2:23)
ஊழியர் மாத்திரம் அல்ல, கிறிஸ்தவர்கள் அனைவருமே தேவ ஊழியம் செய்யும் ஆசாரியர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. 1பேதுரு 2:9, வெளி. 1:6, 5:10, 20:6, 1பேதுரு 2:5, ஏசா. 61:6
மேலும், இயேசுவின் சிலுவை மரணத்தில் நியாயபிரமாணமானது நிறைவுற்று புதிய பிரமாணம் அமுலில் வந்ததை நாம் மறுக்கஇடமில்லை. ரோ. 10:4, அப். 13:38-39; 1கொரி. 1:30; கலா. 3:24; கொலோ. 2:10, 2:17; எபி. 9:7-14, எபி. 10:8-12, 14
நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள் என்று கலா. 3:10ல் பார்க்கிறோம்.
... எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை என்று ரோ. 3:20 சொல்கிறது.
கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு கிறிஸ்துவை பின்பற்றாமலிருந்தால் ஊருக்கு போடும் மாறுவேஷமே !
வெளி உலகிற்கு கிறிஸ்துவை உண்மையாக வெளிப்படுத்தவேண்டும். கலா. 3:27
அப்போது சொந்த வாழ்க்கையும் பரிசுத்தமாயிருக்கும். 1கொரி. 6:19-20
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
இந்த பதிவின் வீடியோ வடிவம் YouTubeல் காண :
*Please Subscribe & Watch our YouTube Videos*
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக