ஞாயிறு, 20 ஜூன், 2021

சரியான ஹால் டிக்கட் ? தினசரி சிந்தனைக்கான வேத துளி

*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 20 June

by : Eddy Joel Silsbee

 

நம்மை படைத்த தேவனின் நாமத்திற்கே எல்லா துதியும் கமும் உண்டாவதாக.

 

சுமாராக நம்முடைய *முதல் 25 வருடம் படிப்பிலும் அடுத்த 25 வருடம் வேலையிலுமாக* 50வயது கழிந்து விடுகிறது.

 

சம்பாதித்ததை உட்கார்ந்து அனுபவிக்க மீதம் 10 அல்லது 15 வருடங்கள். அதுவும் பெரும்பாலும் பராமரிப்பு என்ற போராட்டத்திற்கே  சரியாகிவிடும்.

 

இந்த *சொற்ப ஆயுளுக்காக இவ்வளவு கஷ்டபடுகிறோம்*.

 

ஆனால், முடிவில்லா நித்திய ஆயுளுக்காக வேண்டியதை செய்தாயிற்றா?

 

வேதம் எப்போதும் அதை வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது. ரோமர் 10:9-13, யோவான் 3:16

 

நித்திய ஆயுளா அல்லது நித்திய அழிவா என்பது *நம் கையில் உள்ளது*.

 

நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள இயேசு கிறிஸ்துவே வழி.

யோவான் 14:6.

 

பாதை தவறினால் வேறே இடத்திற்கு *பத்திரமாய்* கொண்டு போகப் படுவோம். யோவான் 8:24, மாற்கு 16:16.

 

இந்த மண் சரீரத்தை விட்டு நாம் பிரியும் போது எந்த அளவிற்கு தகுதி பெற்றோமோ அதன் அடிப்படையில் தான் கொண்டு போய் விடப்படுவோம்.

 

நினைத்த இடத்திற்கு அப்போது நம்மால் போக முடியாது. வேறொவர் தான் கொண்டு செல்வார். லூக்கா 16:22

 

ஆகவே *சரியான ஹால் டிக்கெட்டை இன்னும் எடுக்கவில்லையென்றால் இன்றும் நேரம் உள்ளது*. காலம் தாழ்த்த வேண்டாம்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,

தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee

 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :

https://chat.whatsapp.com/FgzVvru1hol7mjPlXLY1Mr

 

வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

https://youtu.be/DJCSiodYu9o

 

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக