*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 16 June
by : Eddy Joel Silsbee
பிதாவாகிய தேவனுடைய நாமத்திற்கே மகிமையும் கனமும் உண்டாவதாக.
(வேதத்தில்) உள்ளதை உள்ளபடியே தைரியமாய் சொல்ல முடியாதவர்கள் ஊழியத்திற்கே வராமல் இருப்பது நல்லது என்று வேதம் சொல்லுகிறது. (யாக். 3:1)
நடந்த எந்த விஷயத்தையும் *மாற்றி சொல்லவோ, நடக்காததை நடந்தது போல் சொல்லவோ யாருக்குமே அதிகாரமும் இல்லை*. உலக அரசாங்க சட்டத்தின்படியும், பரம ராஜாவின் சட்டத்தின்படியும் *ஆக்கினையையும் நாம் வருவித்துக்கொளுகிறோம்*. நீதி. 19:5
அப்படிப்பட்டவர்களை தேவன் வெறுக்கிறார். நீதி. 6:16-19
*கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக* (யாத். 23:1)
அவ்வாறு சொல்ல தூண்டுகிறவர்களோடு சேரவே கூடாது என்பதை கட்டளையாகவே இஸ்ரவேலருக்கு தேவன் கொடுத்தார்.
அவர்கள் சொல்லும் பொய்களை கேட்டுப் பழகி,
விருப்பங்கொண்டு அந்த பழக்கத்தை பழக்கிக்கொள்ள நேரிடும் !!
இன்று நாம் காணும் இத்தனை கிறிஸ்தவ மதப் பிரிவுகளும் அந்த ஆர்வத்தில் வந்தவையே...
எது உண்மை என்று அறிந்தும் மனம் திரும்பாதவர்கள், *மோட்சதிற்குள் போகும் வாய்ப்பை இழக்கிறார்கள்*. (வெளி. 21:8)
கௌவரவத்தைத் நாடாமல், உண்மையை மாத்திரம் எப்போதும் சொல்லுவோம். தற்போது அது கஷ்டமாகவும் கசப்பாயும் இருந்தாலும், அது தான் நிலைக்கும்.
எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும். எபி. 12:11
சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக