*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 15 June
by : Eddy Joel Silsbee
தேவக்குமாரனுடைய நாமத்தில் வாழ்த்துக்கள்.
வயலில் எடுக்கும் வேளாண்மையை முழுவதுமாக துடைத்து எடுக்காமல் *கொஞ்சம் விட்டு வைக்க சொன்னார்* தேவன்; விடுபட்டவைகள் ஏழைகளுக்கு உதவும் என்பதால்.
அது போலவே உண்ணும் ஆகாரம் *மீந்திருந்தால் அதை வீணாக்காமல் எடுத்து பத்திரப்படுத்தி* வைக்க சொன்னார் நம் ஆண்டவர்.
*ஆகாரத்தை வீணாக்கும்* நிர்விசாரமான எண்ணத்தை *அக்கிரமமாக* தேவன் பார்க்கிறார்.
ஆகாரத்தை வீணாக்கவே கூடாது.
அது தேவன் ஆசீர்வாதமாக நமக்கு கொடுத்தது.
அதை உதாசீனப்படுத்தல் ஆகாது.
*ஆதார வசனங்கள்* :
எசே. 16:49 இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவள் குமாரத்திகளிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை.
யோவான் 6:12 அவர்கள் திருப்தியடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள் என்றார்.
லேவி. 23:22 உங்கள் தேசத்தின் வெள்ளாண்மையை நீங்கள் அறுக்கையில், வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் பரதேசிக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
கிடைக்கும் ஆகாரத்தின் ஒவ்வொரு துளியும் முளைத்தெழும்பின காலத்திலிருந்து பலருடைய கண்காணிப்பிலும் உழைப்பிலும் வளர்ந்து பாதுகாக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டு உணவாகி நம் கரங்களில் வந்து சேர்கிறது.
இவ்வளவு முயற்சிக்குப் பின்னர் அது நம் கரங்களில் வந்து சேரும்போது, தேவன் தம் கிருபையினால் நம்மை நினைத்தருளினதால் அது “நம் கையில் வந்தெட்டியது” என்ற ஆவலுடன், சந்தோஷத்தோடும் நன்றியோடும் தேவனுக்கு நன்றி செலுத்தி (மாற்கு 8:6; அப். 27:35) ஏற்றுக்கொள்ள வேண்டும். மத். 6:11
வீணாக்கக் கூடாது.
அது தேவனை உதாசீனப்படுத்தலுக்கு சமம். ஆதி 1:29-30, சங். 104:14-15, 136:25
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/HC5EvlXcDQ9Ivna03Z4EDR
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக