*தினசரி சிந்தனைக்கான வேத துளி* 4 June
by : Eddy Joel Silsbee
உன்னத தேவன் நம்மை ஆதரிப்பாராக.
தேவன் கொடுத்த பெலத்தில் பிற்காலத்திற்கு நமக்கு உதவும்படி வங்கிகளில் சேமித்து வைக்கிறோம்..
ஆனால் ராஜாவாகிய ஞானியோ நம் சேமிப்பை வங்கிகளில் அல்ல *ஜனங்களிடத்தில் சேர்த்து வைக்கும்படியும்* பல வருஷங்களுக்கு பிற்பாடு அந்த சேமிப்பின் பலன் கிடைக்கும் என்கிறார்.
வசனம் : பிர. 11:1 உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.
தண்ணீர் என்பது ஜனங்களை குறிக்கிறது. வெளி. 17:15
ஆம்,
இப்படி ஒரு சேமிப்பு திட்டத்தை நம்முடைய கவனம் சிதறாமலிருக்க ஆண்டவர் காண்பித்து இருக்கிறார்.
சிறிய சிறிய சேமிப்பாக சிறிய சிறிய திட்டமிட்ட காலத்திற்கு கணக்குகளை துவங்குவோம். அதன் பெரிய சேமிப்பு தொகையாக பிற்காலங்களில் கிடைக்கப்பெறுவோம்.
வருடத்திற்கு ஒருவர் என்று கிறிஸ்துவிற்காக நோக்கமாக இருந்தால், நம் வாழ்நாள் முடிந்து பரலோகம் போகையில் கொடுக்கப்படும் நம் கிரீடம் மகிழ்ச்சியை அளிக்குமே. (1பேதுரு 5:4 அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்)
ஒரு டம்ளர் தண்ணீரையாவது கிறிஸ்துவிற்கு கொடுக்கும்படி நாம் பிரயாசப்பட்டிருக்கிறோமா? மாற்கு 9:41
முயற்சிசெய்வோம், பிரயாசப்படுவோம், கிறிஸ்துவிற்கென்று உழைப்போம். அதன் பலனை நூறத்தனையாய் பெறுவோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், உலக வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 8144 77 6229 / Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg
வலைதளம் : www.joelsilsbee.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக